This entry is in the series 20020602_Issue


தேவையான பொருட்களும் செய்முறையும்

1 1/2 கிலோ ஆட்டு எலும்புகள்

2 லிட்டர் தண்ணீர்

2 தேக்கரண்டி உப்பு

மேற்கண்டவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் அதனை மெதுவான தீயில் ஒரு மணிநேரம் வைத்திருக்கவும்.

இத்துடன்

கால் கிலோ முழு வெங்காயம் உரித்தது

கால் கிலோ கேரட் உரித்து துண்டுகளாக நறுக்கியது

கால் கிலோ முட்டைக்கோஸ் துண்டுகளாக நறுக்கியது

கால் கிலோ பீன்ஸ் நாறெடுத்து துண்டுகளாக நறுக்கியது

3 பல் பூண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும்

மேற்கண்டவற்றை இன்னும் ஒருமணிநேரம் மெதுவான தீயில் நன்றாக வேகவைக்கவும்

எலும்புகளை எடுத்துவிட்டு, மேற்கண்ட கலவையை ஒரு மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொண்டு, நாறு இல்லாமல் வடிகட்டிக்கொள்ளவும்.

இத்துடன் 4 மேஜைக்கரண்டி அரைத்த நிலக்கடலை விழுதும், ஒரு எலுமிச்சை பிழிந்து எடுத்த சாறும் சேர்க்கலாம். இத்துடன் சில வேளைகளில் அரைக் கோப்பை அரிசிச் சாதமும் சேர்த்தும் பரிமாறலாம்.

இத்துடன் தேவையான அளவு உப்பும் மிளகும் சேர்த்துப்பறிமாறவும்.

Series Navigation