This entry is in the series 20011210_Issue


தேவையான பொருட்கள்

3 வேகவைத்த உருளைக்கிழங்குகள்

2 ரொட்டித்துண்டுகள்

4 பச்சை மிளகாய்

1 சோயா இலைகள், நறுக்கியது

1 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள்

உப்பு ருசிக்கு ஏற்ப

செய்முறை

உருளைக்கிழங்குகளையும், உப்பு, பச்சை மிளகாய், சோயாஇலைகள், சிவப்பு மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். ரொட்டித் துண்டுகளை தண்ணீரில் முக்கி தண்ணீரைப் பிழிந்து விடவும். இதனை உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்த்து கட்லெட்டுகள் போல தட்டிக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி இதனை வறுத்தெடுக்கவும்.

Series Navigation