This entry is in the series 20010707_Issue


தேவையான பொருட்கள்

தக்காளி 200 கிராம்

காரெட் 20 கிராம்

உருளைக்கிழங்கு 50 கிராம்

வெங்காயம் 50 கிராம்

நூல்கோல் 1

பீன்ஸ் 10

பால் 200 மிலி

மைதாமாவு 2 தேக்கரண்டி

வெண்ணெய் 30 கிராம்

மிளகுத்தூள் உப்பு

செய்யும் முறை:

1. எல்லா காய்கறிகளையும் மிகச்சிறு சிறுதுண்டங்களாக நறுக்கி, வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரில் போட்டு வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் தீயை மட்டுப்படுத்தி மெல்லிய தீயில் வைக்கவும்

2. வெந்ததும், காய்கறிகளை எடுத்து அவைகளை கரண்டியால் நன்றாக மசித்து சாற்றை எடுத்துக் கொள்ளவும். சக்கையாக இருக்கும் மிச்சத்தை தேவையின்றி போட்டு விடலாம்

3. பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு, அது உருகியதும், மைதா மாவைப் போட்டு கரைக்கவும். இதில் பாலை ஊற்றி கலக்கி கெட்டிப்பட்டதும், காய்கறிச்சாற்றைக் கலந்து மெல்லிய தீயில் சூடாக வைக்கலாம். தேவைக்கும் குறைவாக உப்புப் போடவும்.

4. சாப்பிடுவதற்கு முன்னர் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதனுடன் சாப்பிடுபவர் தேவைக்காக உப்பும் மிளகும் வைக்கலாம். மேலே தூவிக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

Series Navigation