This entry is in the series 20010318_Issue


கறி –1/2கிலோ

பெரிய வெங்காயம் –100கிராம்

இஞ்சி –1துண்டு

பூண்டு –8பற்கள்

பச்சை மிளகாய் –4

கொத்துமல்லித் தழை –1சிறுகட்டு

மிளகாய்த்தூள் –3டாஸ்பூன்

சீரகம் –1டாஸ்பூன்

தேங்காய்த் துருவல் –2டேபிள் ஸ்பூன்

முந்திரிப் பருப்பு –10கிராம்

தயிர் –100மி.லி

கறியை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள், தயிர் சேர்த்து ஊற வைக்கவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.

தேங்காய்த் துருவலுடன் முந்திரிப் பருப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், கொத்துமல்லித்தழையில் பாதி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கி, மட்டன் துண்டுகள் சேர்த்து எண்ணெய் மேலாக மிதக்கும் வரை வதக்கி, அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கியதும் தேவையான அளவு நீர், அரைத்த தேங்காய் மசாலா, மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

மசாலா கெட்டிப்பட்டதும் நறுக்கிய கொத்துமல்லித் தழை தூவி சூடாகப் பரிமாறவும்.

Series Navigation