இறப்பில்லாத வாழ்க்கை: ஒரு அறிவியற்பூர்வமான உண்மையா ?

This entry is part [part not set] of 25 in the series 20020902_Issue


நீங்கள் இன்னும் 20 வருடங்கள் உயிரோடு இருந்தால், நீங்கள் ஒருவேளை இறப்பில்லாமல் வாழலாம்.

பிறந்த நாள் முதலாக, நாம் நிச்சயமாக நடக்கப் போகும் இறப்புக்கு எதிராக போராட ஆரம்பித்துவிடுகிறோம். இன்றைய புள்ளிவிவரங்கள் இன்று பிறக்கும் ஒரு குழந்தை சராசரியாக 76 வருடங்கள் வாழும் எனச் சொல்கின்றன. ஆனால், இந்த சராசரி பழைய சராசரி அல்ல.

உதாரணமாக, 1796இல், சராசரி மனித வாழ்வு 24 வருடங்கள். சுமார் 100 வருடங்களுக்குப்பின்னர் இது 48ஆக ஆனது. இன்று இது 76ஆக இருக்கிறது. அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆண்டி-ஏஜிங் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் டாக்டர் ரொனால்ட் க்ளாட்ஜ் அவர்கள், ‘இன்று வயதுக்கு வரும் பெரும்பாலான அமெரிக்கர்கள் தங்களுடைய 100ஆவது வயதில் ஆரோக்கியத்துடன் இன்னும் பல வருடங்களை எதிர்பார்ப்பார்கள்.. இன்றைய வயதுக்கு வரும் மக்கள் பலர் 120 அல்லது 150 வருடங்கள் நிச்சயம் வாழ்வார்கள் ‘ என்று கூறுகிறார்.

இன்றைய அறியலறிஞர்கள், மனித ஜீன் உள்ளே புகுந்து ஆராய்வதிலிருந்து, வேலைப்பளுவும், உணவும் எப்படி மனித வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்று ஆராய்வது வரை எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் தன்னை இளமையாக வைத்துக்கொள்ளவேண்டும் என விரும்பும் மக்கள், ஹார்மோன் சிகிச்சையிலிருந்து, முகத்தின் சுருக்கங்களை நீக்கும் அறுவைச்சிகிச்சை வரை எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறார்கள். இவைகள் வெறுமே வாழும் நாட்களை நீடிக்கவைக்கத்தான் முடியும்.

‘வயதாவதை தடுக்கும் மருந்தின் நோக்கம், வாழ்நாளின் கடைசி நாட்களை இன்னும் நீட்டுவதல்ல. வாழ்நாளின் நடுவாந்திர பகுதியை நீட்டுவதைப் பற்றியது… இன்னும் வாழ்நாளின் கடைசி வருடங்களை மிகவும் சுருக்கி, வயதாவதால் வரும் நோய்களை மிகமிக கடைசியாக வரவைப்பதையும், இறப்புக்குச் சற்று முன்னரே அந்த வியாதிகளைக் கொண்டுவருவதையும், முடிந்தால் அந்த நோய்களே வராமல் தடுப்பதையுமே குறிக்கோளாகக் கொண்டது. ‘ என்று டாக்டர் க்ளாட்ஜ் கூறுகிறார்.

மனிதன் வயதுமுதிர்வதின் காரணம் இன்று புரிபட்டிருக்கிறது.

இறுதியாக மனிதன் வயதாவதின் காரணம் இன்று தெரியவந்திருக்கிறது. இதனால், சுருக்கம் நீக்கும் அறுவைச்சிகிச்சைகளும், மருந்துகளும், பாம்பு எண்ணெய் சமாச்சாரம் போல ஆகிவிடும். விண்வெளிப் பிரயாணம் போன்றவைதான் நவீன தொழில்நுட்பத்தின் பயன்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, மெதுவாக, இறவாமை என்பது நவீன தொழில்நுட்பத்தின் பக்க விளைவாக மெளனமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. மிச்சிகன் பல்கலைக்கழக உயிரியல் துறைப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் ஜான் லாங்மோர் (படம்) அவர்களும் அவரது தோழர்களும் மனித செல்லின் உள்ளே உயிரின் அடிப்படை தளமான டி.என்.ஏ மூலக்கூற்றை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக அந்த டி.என்.ஏ மூலக்கூற்றின் உள்ளே முன்னால் பார்க்கப்படாத ஒரு திருப்பித்திருப்பி வரும் என்சைம் ஜோடிகளைப் பார்க்கிறார்கள்.

Telomeres – டெலோமர்ஸ் – இறப்பின் வடிவம்

டெலோமர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த மூலக்கூறு சங்கிலிகள் ஒரு நாடாவின் முடிவில் இருக்கும் வெற்று குஞ்சம் போன்றவை. உண்மையில், இந்த டெலோமெர்ஸ், ஒரு டி.என்.ஏ இரண்டாகப் பிரியும்போது, அந்த இறுதிகளை நேராக சரிசெய்யும் வேலை செய்பவை. இந்த டி.என்.ஏ மூலக்கூறுகள் தவறாக பிரதி எடுக்கப்படக்கூடாது என்று இந்த பிரதி எடுக்கும் வேலையைப் பாதுகாக்கும் இந்த டெலோமர்ஸ் முக்கியமான டி.என்.ஏ சங்கிலிகள் தொலைந்து போய்விடக்கூடாது என்று சரி பார்ப்பவை.

செல் வயதாக வயதாக, இந்த செல் தொடர்ந்து ஆக்ஸைடுகளாலும், உடலில் உருவாகும் ஃப்ரீ ரேடிகல்களாலும், தாக்கப்படுகின்றன. நாம் உயிர்வாழ்வதன் காரணம், இந்த செல்கள் இந்த தாக்குதல்களால் இறந்து போவதற்கு முன்னால், தன்னைத்தானே பிரித்து இரண்டு செல்களாக ஆக்கிக்கொண்டே இருப்பதுதான். நம்முடைய செல்கள் ஒவ்வொருமுறை இரண்டாகப் பிரியும்போதும், நம்முடைய செல்லில் இருக்கும் டி.என்.ஏவின் ஒரு சிறுபகுதி தொலைந்து போய்விடுகிறது. அடுத்த பிரதிக்குப் போவதில்லை. இந்த தொலைந்து போகும் பகுதி பெரும்பாலும் இந்த டெலோமெர்ஸ் பகுதிதான். ஆகவே, இவ்வாறு தொலைந்து போவதால் பக்க விளைவு இல்லை.

அறிவியலறிஞர்கள் சமீபத்தில் கண்டறிந்தது, இந்த டெலோமர்ஸ் சங்கிலிகள் நாம் வயதாக வயதாக நீளத்தில் குறைந்து கொண்டே போகின்றன என்பதுதான். ஆகவே, இந்த டெலோமெர்ஸ்கள் மிகவும் சுருங்கியபின்னர், நம் உடலில் நடக்கும் செல்கள் பிரிவு, டி.என்.ஏவின் முக்கிய பகுதிகளை பாதிக்கத் தொடங்குகிறது. இதனால், சரியாக டி.என்.ஏ பிரதி எடுக்கப்படுவதில்லை. இது டி.என்.ஏவை கெடச்செய்து செல்களை பலவீனப்படுத்துகிறது. இதுவே நாம் வயதாவதின் காரணம்.

டாக்டர் லாங்மோர் அவர்கள், பெளதீக, உயிரியல், மரபணு தொழில்நுட்ப உபாயங்கள் கொண்டு, இந்த டெலோமர்ஸின் வேலையை ஆராய்கிறார். இவரது குழு, செயற்கையாக உருவாக்கப்பட்ட டி.என்.ஏவில் வேலை செய்யும் டெலோமெர்ஸ் கொண்டு, எவ்வாறு இந்த டெலோமரெஸ்கள் குரோமசோம்களை நிலையாக வைத்திருக்கின்றன என்பதையும், எவ்வாறு இந்த டெலேமரெஸ்கள் நீளம் குறைவதால் நிலையில்லாமை இந்த குரோமசோம்களில் புகுகின்றது என்பதையும் ஆராய்கிறது.

இந்த குரோமசோம்களை நிலையாக வைத்திருக்க தேவையான புரோட்டான்கள் கண்டறியப்பட்டு, பிரதிஎடுக்கப்படுகின்றன (cloned), ஆராயப்படுகின்றன. எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மூலம் இந்த மாதிரி டெலோமரெஸ்களின் வடிவமைப்பு நேரடியாகப் பார்க்கப்படுகின்றது. இவரது குழு, புதிய என்சைம் வேதிப்பொருட்கள் மூலம் இந்த டெலோமரெஸ் டி.என்.ஏக்களின் வடிவமைப்பை ஆராயவும், இதில் சாதாரண செல்களின் உள்ளே இருக்கும் டி.என்.ஏவின் உள்ளேயும், அசாதாரண டி.என்.ஏவின் உள்ளேயும் இருக்கும் டெலோமர்ஸ்களின் வடிவமைப்பை கருத்தில் கொண்டு இது எவ்வாறு கேன்ஸர், முதுமை ஆகியவற்றில் பங்கு வகிக்கிறது என்பதையும் ஆராய்கிறார்கள்.

வியூசோன் டாக்டர் டாங்மோர் அவர்களிடம் எடுத்த பேட்டி இதோ.

கேள்வி: டெலோமர்ஸ்களின் வேலை என்ன ? இந்த டெலோமர்ஸ்களின் நீளத்தை அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்ட என்சைம் என்ன ?

பதில்: டெலோமர்ஸ்கள் (Telomeres) முக்கியமான டி.என்.ஏ சங்கிலிகள். இவை குரோமசோமின் இரண்டு பக்கங்களிலும் இருக்கின்றன. ஒவ்வொருதடவை ஒரு குரோமசோம் இரண்டாகப் பிரியும்போதும், இந்த டி.என்.ஏவின் இரண்டு பக்கமும் இருக்கும் பகுதிகளில் ஒரு சிறிதளவு காணாமல் போய்விடுகின்றது. ஏன் காணாமல் போகின்றது எனத் தெரியவில்லை. மனித டெலோமர்ஸ் நீளம் குறைவது என்பது, மற்ற கீழ் விலங்குகளில் இருக்கும் டெலோமர்ஸ் நீளம் குறைவதை விட அதிக வேகத்தில் நடைபெறுவதால், ஒருவேளை இவ்வாறு நீளம் குறைவது மனிதர்களைப் பொறுத்த மட்டில் நல்லதாக இருக்கலாம். அதாவது இறப்பு. முதுமை பற்றிய டெலோமர்ஸ் தேற்றம் என்ன சொல்கிறதென்றால், ஒரு மனிதனின் வாழ்நாளில் டெலோமர்ஸ் நீளம் குறைவது இயற்கையாக நடக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட நீளம் வந்ததும், ஒரு சிக்னல் செல்களுக்குப் போகிறது. அதாவது இனிமேல் வளரவேண்டாம். இதனை செனெஸ் (senesce) என்கிறோம். பிறக்கும்போது, மனித டெலோமர்ஸ் நீளம் சுமார் 10,000 ஜோடிகள். நூறு வயதாகும்போது, இந்த நீளம் சுமார் 5000 ஜோடிகளாகக் குறைந்துவிடுகிறது.

டெலொமரெஸ் (Telomerase) என்பது அடிப்படையில் ஒரு என்சைம். (enzyme, a catalytic protein) இது டெலோமர்ஸின் நீளத்தைக் குறைப்பதையும், நிறுத்துவதையும் செய்யக்கூடும். இது குழந்தை உருவாகும்போதும் முட்டையில் இருக்கும்போது, டெலோமர்ஸின் நீளத்தைப் பாதுகாக்கவும், அந்த குழந்தை தன் சந்ததியை உருவாக்கவும் தேவையான அளவு நீளத்தை சரிபார்க்கவும் தேவையான என்சைம்.

கேள்வி: பிறப்புக்குத் தேவைப்படாத செல்களில் இறப்பு என்பது எப்படி நல்ல விளைவு ?

பதில்: கான்ஸர் பற்றிய டெலோமர் தேற்றம் என்ன கூறுகிறதென்றால், ஒரு டெலோமரின் முக்கியமான வேலை, டெலோமர் சரியான நேரத்தில் தன்னுடைய செல் பிரிதலை நிறுத்தாமல் தொடர்ந்து செல்கள் பிரிந்து கொண்டே போய் கட்டியாக( tumor) ஆகி விடுகிறது. டெலோமர் சரியான நேரத்தில் தன்னுடைய நீளத்தை நிறுத்துக்கொண்டால், இவ்வாறு செல்கள் பிரிந்து கொண்டே போகாது. இது கான்ஸரை நிறுத்தும்.

கான்ஸரில் இருப்பது சாகாத செல்கள். இந்த சாகாத செல்கள், இறப்பதற்கு முடிவு செய்யப்பட்ட மற்ற சாதாரண செல்களை விட அதிக பலம் பெற்றுவிடுகின்றன. இயற்கை வடிவமைத்த இந்த மனித டெலோமர் சுருக்கம் என்பது மனித வாழ்க்கையை நீட்டுவதற்கும், கட்டுப்படுத்த முடியாமல் பிரிந்து கொண்டே போகும் செல்களை தடுக்கவும் வடிவமைக்கப்பட்டது போல் உள்ளது.

இரண்டு வகைக் கட்டிகள் இருக்கின்றன. கெடுதி செய்யாத கட்டிகள் (benign tumors), சாகாத கெடுதியான கட்டிகள் (Malignant or immortal tumors ) என இரண்டு வகை. இந்த கெடுதியான கட்டிகளில் இருக்கும் செல்களில் இருக்கும் டெலோமர்ஸ்களின் சுவிட்சு ஆன் செய்யப்பட்டது போல இருக்கிறது. சில கான்ஸர்களும், முதுமையும், டெலோமர்ஸின் உயிரியலோடு தொடர்புடையது போல இருக்கிறது.

ஆகவே, சாதாரண செல்களின் டெலோமர்ஸ் வேலைப்பாட்டை அதிகரிப்பதன் மூலம் உயிரியல் ரீதியாக முதுமையை நிறுத்தலாம். ஆனால் இதன் பக்கவிளைவு அதிகப்படியான கான்ஸர்கள் தோன்றுவது. டெலொமர்ஸ் பற்றிய ஆழமான புரிதலும், இதன் தேற்றத்தை இன்னும் செழுமைப்படுத்துவதும் நமது முதுமையைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள உதவும். இதன் மூலம் முதுமையை நிறுத்தவும், அதே வேளையில், கான்ஸரை நிறுத்தவும் இயலும்.

டெலோமர்ஸ் செய்யும் வேலை, நமது செல்லின் மிகவும் சிக்கலான செல் வளர்ச்சியின் இன்றியமையாத பாகம். இதில் ஏராளமான இன்னும் பல விஷயங்களும் கலந்திருக்கின்றன. டெலோமர்ஸ் நீளமாவதற்கும், குறைவாவதற்கும், நிறுத்தப்படுவதற்கும் ஏராளமான காரணிகள் நம் உடலில் இருக்கின்றன. இதில் அனைத்தையும் ஆராய்ந்து, அதில் எது சரியான எளிமையான வழி என்பதைக் கண்டறிந்து அதனை உபயோகப்படுத்தி, முதுமையை நிறுத்தவும், கான்ஸரை நிறுத்தவும் இயலும்.

கேள்வி: ஒவ்வொரு டி.என்.ஏவுக்கு தனி குணாம்சம் கொண்ட டெலோமர்ஸ் இருக்குமா ? அப்படி என்றால், முதுமைக்கான பொதுவான பரிகாரம் என்பது கிடையாதா ?

பதில்: வெவ்வேறு மனிதர்களுக்கு இருக்கும் டெலோமர்ஸ்கள் ஒரே மாதிரியானவை. ஆனால் வெவ்வேறு நீளம் உடையவை. ஒருவருக்கு இருக்கும் டெலோமர்ஸ் நீளத்துக்கும் அவரது வாழ்க்கை வருடங்களுக்கும் இடையே என்ன தொடர்பு இருக்கிறது என்பதை அவரசப்பட்டு சொல்லிவிட முடியாது. இந்த டெலோமர்ஸ் நீளம் குறையாமல் தடுப்பதன் மூலம் முதுமையை நிறுத்திவிட முடியுமா என்பதையும் அவசரப்பட்டு சொல்லிவிட முடியாது. ஒரே மனிதருக்குள் இருக்கும் வெவ்வேறு குரோமசோம்களில் இருக்கும் டெலோமர்ஸ்கள் வெவ்வேறு நீளமுடையவையாக இருக்கின்றன. ஆகவே, ஒருவரிடம் இருக்கும் பல குரோமசோம்கள் நீளமாக இருக்கலாம். ஆனால் ஒரு குரோமசோமில் இருக்கும் டெலோமர் நீளம் குறைவாக இருந்து செல் வளர்ச்சியை பாதிக்கலாம்.

கேள்வி: ஷாய் மற்றும் ரைட் (Shay, Wright ) ஆகியோர் செய்த வேலையில், டெலோமரீஸ் telomerase என்சைம் கொண்டு டெலோமர் நீளத்தை அதிகரித்தார்கள். இது முக்கியமானதா ?

பதில்: ரைட் அவர்களும் அவரது சகாக்களும் டெலோமரீஸ் என்சைம் கொண்டு சாதாரண செல்களைத் தூண்டினார்கள். அவர்கள் 1) டெலோமர்ஸ் நீளம் அதிகரிப்பதையும், 2) செல்லின் வாழ்நாள் அதிகரிப்பதையும் எதிர்பார்த்தார்கள். விளைவு அவர்கள் எதிர்பார்த்தது போலவே இருந்தது.

கேள்வி: இந்த டெலோமரீஸ் என்சைம் கொண்டு பரிசோதனை செய்யப்பட்டதில் எவ்வளவு செல் வாழ்நாள் அதிகரிக்கப்பட்டது ?

பதில்: அந்த செல் வாழ்நாள் அதிகரிப்பு என்பது, மனித வாழ்க்கையில் பல நூறு வருடங்கள் வாழ்நாள் அதிகரிப்புக்குச் சமானம்.

**

டாக்டர் லாங்மோர் அவர்கள், சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி முடித்தவர். காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பாஸல் பல்கலைக்கழகத்திலும் போஸ்ட் டாக்டோரல் பெல்லோஷிப் பதவி வகித்தவர்.

http://www.viewzone.com/aging.html

Series Navigation

செய்தி

செய்தி