சிலுவைகள் தயார்…

This entry is part of 39 in the series 20080306_Issue

ராஜா வாயிஸ், மும்பை


வீதிகளில் பெரிய கோவில்கள் …
கடவுள் மட்டும் இன்னும்
குருசடிகளின் ஓரத்தில்.

அயலா‌‌ரையும் நேசிக்கச் சொல்லும் வரிகள்
அலங்கரிக்கப்பட்ட வண்ண காகிதங்களில்
கோவிலின் முடுக்குகளில்

இரண்டிலொரு ஆடையை
அடுத்தவருக்கு கொடுக்க சொன்னவரின் மரணத்தை கொண்டாட
பட்டு சேலைகள் கொள்முதல்

வெள்ளிக்கிழமை தோறும் சிலுவைப்பாதைகள்…
பக்கத்து வீட்டுக்காரர்களை கழுவில்
ஏற்றிய இரத்த கரங்களுடன்

‌‌வேதங்கள் எல்லாம் ஓய்வெடுக்க வேண்டிய தருணம்
புதிய இ‌யேசு கிறிஸ்துக்களை தேடுங்கள்
சிலுவைகள் தயாராக இருக்கிறது.

Series Navigation