கல்லூரி இறுதி நாள்
Published May 3, 2007 • By
பாஷா
பாஷா

கல்லூரி இறுதி நாளான
இன்று கூட நான்
சொல்லிவிடப்போவதில்லை
நான்காண்டுகளாக செதுக்கி
நட்பு சாயம் பூசிய
என் காதலை!
மரங்களின் இடுக்குகளின்
உள் நுழைந்து வரும்
எனக்கான உன் தேடலில்
ஒருபொருளை இன்றும்
நான் உணரப்போவதில்லை!
நட்புக்கும் காதலுக்கும்
நடுவில் அமர்ந்து நாட்டியாமாடும்
வார்த்தைகள் அடங்கிய உன்
வாழ்த்து அட்டைகளின் ஒரு
விளக்கத்தை இன்றும்
நான் கேட்டுவிடப்போவதில்லை!
என்
துன்பம் பகிர்ந்து
கண்களில் குளம்கட்டி
கரையேற விடாமல் செய்யும்
உன் முயற்சிகளில்
இன்றும் நான்
மீண்டுவிடப்போவதில்லை!
இன்று விடைபெறாமலேயே
விலகி போய்கொண்டிருக்கிறேன்
விலகிய பாதைகளின் நீட்சியில்
என் காதலை
தூவிக்கொண்டே!
Sikkandar.Nawabjan@ustri.com