This entry is in the series 20070405_Issue

ரஜித்


தமிழா
உண்மையைச் சொல்

திரைப்படம் தெரிந்த அளவு
திருவள்ளுவர் அறிவாயா?

நடிகையின் பேட்டி
நல்ல தமிழ்ப் பேச்சு
எதை நீ விரும்புகிறாய்?

அரைமணி நேரமேனும்
உரையாடியதுண்டா
ஆங்கிலக் கலப்பில்லா
அழகு தமிழில்?

அறிவாயா நீ
உன் பிறந்தநாளின்
தமிழ்த் தேதி?

முடிந்த தமிழாண்டு
தொடங்கும் தமிழாண்டு
பெயர்கள் அறிவாயா?

வாழை இலை வடை பாயசம்
வகைவகையாய் கறிகள் பதினாறு
வயிற்றுக்கு விதி சொனனாய் வாழ்க
வளர்ச்சிக்கு விதி சொன்னதுண்டா?

கொட்டு முரசு தமிழா
கொண்டாடுவோம் இன்று
தமிழ்ப் புத்தாண்டு

ரஜித்

Series Navigation