This entry is in the series 20021215_Issue

மோகனா


ஒரு அன்பு காவியம்
முடிந்து விட்டது.
என் நட்பு வீணையின்
நரம்பு அறுந்து விட்டது.

நட்பின் இலக்கணம்
அறிய வைத்தாய்
அன்பின் அடைக்கலமாய்
வாழ்ந்து வந்தாய்..

என் பிரிய தோழி,
உன்னை பார்க்கும் போதெல்லாம்
கனிந்த வார்த்தைகள்
கண்கள் மின்ன
பேசுவாய்,

இனி எங்கு காண்பேன்
அந்த கண்களை, அந்த கண்ணின்
மின்னலை – இனி மின்னல்கள் எல்லாம்
உன் கண்களை நினைவு கூறுமே..

நேசிக்க மட்டுமே
தெரிந்தவளே, எதிரிகள்
என யாரும் இல்லை உனக்கு –
அதனால் தானோ காலனும்
உன் நன்பனாகி போனான்..

வாழ்க்கை வாழ தான், வீழ இல்லை
என புரிய வைத்தவள் நீ – இன்று
யார் வாழ நீ வீழ்ந்தாய் ?

சேர்ந்து புகைபடம் எடுத்தால்
பிரிந்துவிடுவீர்.. யாரோ சொல்ல
நாமும் தவீர்த்தோம்; நாம்
அறியாமல் யார் எடுத்தார் நம்மை –
இன்று பிரிந்து விட்டாயே..

என் கவிதைகள் கண்ணீர்
வடிக்கின்றன – தன் முதல்
வாசகியை இழந்த சோகத்தில்

என் தூரிகைகள் சபதம்
செய்கின்றன – உன்
முகம் தவிற வேறு தீட்டுவதில்லை என்று.

உன்னை காண்பது
இனி சாத்தியம் இல்லையா ?
அசாத்தியங்கள் சாத்தியம்
ஆகாதா ?

அன்பானவளே,
அடுத்து ஒரு பிறவி இருந்தால்
அதிலும் என் தோழியாய் வா ஒரு
நிபந்தனையுடன் – எனக்கு
முன்னால் காலனை நாடுவதில்லை என்று!
***
மோகனா
***
T_Mohana_Lakshmi@eFunds.Com

Series Navigation