சிறப்பு தள்ளுபடி
நந்தா, வேலூர்

அறுபது பவுன் நகை…
சின்னதா( ?) ஒரு வண்டி
கோட்டு சூட்டு இத்யாதி
சாமான் செட்டு இன்னபிற
ரொக்கப் பணம் அ… சொச்சம்…
காசாசை எனக்கில்ல…
குடுத்த வாக்கு முக்கியம்…
கொண்டு வந்த சீர்ல
பவுனு ரெண்டு கொறையுதடி…!
கல்யாண சந்தையில…
உன்னை வாங்கயில என் புருசா…
ரெண்டு பவுனு தள்ளூபடி
உன் விலையிலன்னு
நான் நெனெச்சேன்…!
nandakumar.nagarajan@airtours.co.uk
ngknanda@yahoo.com