அடிமை விடியல்
மனஹரன், மலேசியா

இன்னும்
என்ன மெளனம் ?
புதிய விடியலின்
வருகையால்
புன்னகைத்ததுபோதும்
பூகம்பமாய்
புறப்படப்போவது
எப்போது ?
உன் கரங்களுக்கா
விலங்குகள்! ?
அடிமைப்பண்ணைக்குள்
அல்லல்பட்டது
இதற்காகதானா ?
அவசியம் இல்லாமல்
ஆத்திரம் கொண்டது
இதற்காகத்தானா ?
விழிகளுக்கும்
விரல்களுக்கும்
இடையில்
உடந்து கிடக்கும்
இணக்கம்!
நீ
சம்மதித்தால்
இப்போதோ
எப்போதோ
இடைவெளி கலன்றிட
இணைந்திருக்கலாம்.
***
kabirani@tm.net.