This entry is in the series 20010602_Issue

கே ஆர் விஜய்


அலைந்து அலைந்து வீடு சேர்ப்பவர்.

கார் சேப்பவர்.

இன்னும் பல சேர்க்க அல்லல் படுபவர்.

இவர்களை காணுங்கால்

நானோ அதிர்ஷ்டசாலி.

ஏழை மீனவர்.

கூட்டாஞ்சோறு

கூட்டமான குடும்பம்

குழப்பமுள்ள வீடு

பல் தொியும் புன்னகை

தன்னிறைவான சிாிப்பு.

ஏழை மீனவர்

என்னையும் விட அதிர்ஷ்டசாலி.

உண்மையிலே

தன் வாழ்க்கை-

தன் உடை-

தன் உறையுள்

எதையும் சிந்தியாது வாழும்

அந்த மீன் தான்

அனைவரையும் விட

அதிர்ஷ்டசாலி.

Series Navigation