சி. ஜெயபாரதன்

ஈழத்தில் இட்டதீ சீதைக்கு! எழில்மதுரை
சூழத்தீ இட்டது கண்ணகிக்கு! – வாழாது
மீண்டும் நகைச்சண்டை! மேனியில்தீ தங்கைக்கு!
வேண்டாம் வரதட் சணை!
தாலிகட்ட நூறுபவுன்! தாயாக்க வேறுபவுன்!
கூலிமுதல் தந்தால்மூ கூர்த்தமெனும் – வாலிப
ஆண்மகனும் தாசியைப்போல் ஆசையுடைத் தாசனே!
வேண்டாம் வரதட் சணை!
|
Thinnai 2000 May 07 |
திண்ணை
20000507_Issue சித்ராதேவி
|