ஜெகத் ஜால ஜப்பான் -5 சுமிமாசென் தொடர்ச்சி

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

சித்ரா சிவகுமார்



あ அ
い இ
う உ
え எ
お ஒ

か க
き கி
く கு
け கே
こ கோ
さ ஸ
し ஷி
す சு
せ சே
そ சோ
た தா
ち சி
つ ட்சு
て தே
と தோ
な ந
に நி
ぬ நு
ね நே
の நோ
は ஹ
ひஹி
ふ ஹ{
へ ஹே
ほ ஹோ
ま ம
み மி
む மு
め மே
も மோ
や ய

ゆ யு

よ யோ
ら ர
りரி
る ரு
れ ரே
ろ ரோ
わ வ

を வோ

ん ன்

சில ஹிராகானா எழுத்துக்கள்

சில ‡புரிகானா எழுத்துக்கள்

வெளி நாட்டுச் சொற்களை எழுதும் போதுஇ அவை கடன் வாங்கப் பட்ட சொற்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் வகையில்இ ‘கதாகானா” என்ற எழுத்துக்களைக் கொண்டு எழுதுவர். போர்ச்சுகீசியஇ டச்சுஇ ஆங்கில மொழிச் சொற்கள் பலவும்இ ஜப்பானிய மொழியில் வெகுவாக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கதாகானா எழுத்துக்களும் கூடஇ ஹிராகானா போன்று க கி கு கே கோ என்ற ஒலி வகையைச் சார்ந்தவையே.

சில கதாகானா எழுத்துக்கள்

மேலும் ஆங்கில எழுத்துக்களை எழுதி படிக்கும் போதுஇ அதை ‘ரோமாஜி” என்று அழைப்பர். ஊனுஇ னுஏனு போன்ற வார்த்தைகளை அப்படியே ஆங்கிலத்திலேயே எழுதுவர்.

ஜப்பானிய மொழி எழுதுவதற்கு மிகவும் கடினமான மொழி. இது மேலிருந்து கீழும்இ வலமிருந்து இடமும்இ புத்தகத்தின் பின்னிருந்து முன்னும் எழுதப்படும். ஆனால் ஜப்பானிய மொழி பேசுவதற்கு மிகவும் எளிய மொழி.

அடிப்படையில் ஜப்பானிய மொழியில் காஞ்சி எழுத்துக்கள் 3000க்கும் மேல் உள்ளன. ஆனால் எளிமை கருதிஇ மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் எழுத்துக்களை மட்டுமே கற்கும் வகை செய்யப்பட்டு உள்ளது. ஜப்பானிய குழந்தைகள் ஒன்றாம் வகுப்பிலிருந்தே காஞ்சி எழுத்துக்களை எழுதவும் படிக்கவும் ஆரம்பித்து விடுகின்றனர். அவர்கள் ஆறாம் வகுப்பிற்புச் செல்லும் போது கிட்டதட்ட 1006 எழுத்துக்களைக் கற்க வேண்டும் என்று ஜப்பானியக் கல்வித் துறை வலியுறுத்துகிறது. மேலும் 939 எழுத்துக்களை அவர்கள் மேல்நிலைப் பள்ளியில் கற்று விட வேண்டும். 1945 எழுத்துக்களைக் கற்றாலேஇ அன்றாட வாழ்க்கையில் எழுதப் படிக்க முடியும். அவ்வப்போது புதிய எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் போதுஇ அவற்றை ‡புரிகானாவில் எழுதி மக்களுக்குப் புரிய வைத்து விடுவார்கள்.

ஜப்பானிய இலக்கியம் மிகவும் பாரம்பரியம் மிக்கது. கோஜிகி என்ற நூல்இ கி.மு. 712ல் எழுதப்பட்டது. முதல் ஜப்பானிய புதினத்தை ஒரு பெண்மணி எழுதியுள்ளார். கென்ஜி மோனோகதாரிஇ கென்ஜியின் கதை என்ற புதினத்தை முராசாகி ஷிகுபு என்பவர் எழுதினார். இருபதாம் நூற்றாண்டில் கவாபாதா யசுனோரிஇ ஒயே கெனடசாபூரோ என்ற இருவர்இ இலக்கியத்திற்கான நோபல் பரிசுகளை வென்றனர்.

ஜப்பானின் ஜெட் வேக முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போன மற்ற நாட்டினர்இ அவர்களுடன் வர்த்தகஇ வாணிகம் செய்ய ஜப்பானிய மொழியைக் கற்க ஆரம்பித்தனர். இன்று உலகில் பல பல்கலைக்கழகங்களில் ஜப்பானிய மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. இலட்கக் கணக்கானோர் அதைப் பயின்றும் வருகின்றனர்.

இதற்காக ஜப்பானிய மொழித் தகுதித் தேர்வு (துயியநௌந டுயபெரயபந Pசழகiஉநைnஉல வுநளவ துடுPவு) ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இது நான்கு தேர்வு நிலைகளைக் கொண்டது. நான்காம் நிலைக்கு 200 காஞ்சி எழுத்துக்களும்இ முன்றாம் நிலைக்கு 400இ இரண்டாம் நிலைக்கு 800இ மற்றும் முதல் நிலைக்கு 1945 எழுத்துக்களும் என்று தேர்வு எழுத வேண்டும். உடன் பேசவும் கற்க வேண்டும்.

ஜப்பானிய மொழி கற்கும் மையம் தமிழ் நாட்டில் உண்டா என்ற கேள்வி உடனே எழுமே. சென்னையில் இதற்கான பல மையங்கள் உள்ளன. அதில் ஒன்று யுழுவுளு. இம்மையம் ஜப்பானிய மொழியைக் கற்றுத் தரும் சேவையைச் செய்து வருகின்றது. நான் இந்த மையத்தில் தான் மொழியைக் கற்றுஇ ஜப்பானிற்கும் சென்று வந்தேன்.

ஜப்பானிய மொழி தெரிந்த கணிப்பொறியாளருக்கு தற்போது அதிக கிராக்கி இருக்கிறது என்றே சொல்லலாம்.

தமிழர்களாகிய நமக்கு ஜப்பானிய மொழியைப் பேசக் கற்பது மிகவும் எளியது. தமிழைப் போன்றே ஒலி வடிவம் கொண்ட மொழி இம்மொழி. இந்த நூலில் வௌ;வேறு பகுதிகளின் தலைப்புகளை நான் அன்றாடம் உபயோகிக்கும் சொற்களைக் கொண்டு அமைத்துள்ளதை நீங்கள் கண்டு இருப்பீர்கள். அதைப் படிக்கும் போதேஇ மொழி பேச எவ்வளவு எளிமையானது என்பதையும் நீங்கள் உணர்ந்திருக்கலாம்.

தமிழ் இலக்கண முறைகள் பலவும் கூட இம்மொழியில் உண்டு. அதன் காரணமாகவே நான் இம்மொழியைக் கற்க நேர்ந்தது. அதில் தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றேன்.

ஜப்பானிய மொழி எழுதப் படிக்க கடினமேயானாலும்இ தமிழைப் போன்றேஇ பண்பும் முறைமையும் கற்க வைக்கும் மொழி இது என்பது மட்டலும் உண்மை.


Series Navigation

சித்ரா சிவகுமார்

சித்ரா சிவகுமார்