இந்தியாவின் தேசிய விருதுகள்

This entry is part [part not set] of 34 in the series 20070906_Issue

சாதிக்


அன்பு நண்பர்களுக்கு,

சமீபத்தில் பல சிறந்த நடிகர்களின் (என்று சொல்லப்படுபவர்களின்) அலசல்கள் கண்டேன். நானும் சில கருத்துக்களைக் கூற விரும்பினேன். இருந்தாலும் பல எதிர்மறை விஷயங்களைக் கருதி பின் வாங்கிக் கொண்டேன். ஒன்று நேரமில்லாதது. முக்கியமான இன்னொன்று இந்தியர்களை பொறுத்தவரை சில விஷயங்கள் பெரும்பான்மை மக்களின் உணர்ச்சியின் அடிப்படையில் நிறுவப்பட்டு “இதுதான்” என்று நம்பப்பட்டு வருகின்றன. அதன் நம்பகத்தன்மையை கேள்வி கேட்பவன்
கிட்டத்திட்ட ஒரு வில்லனாகவே கருதப்படுகிறான். கருதப்படுவான். தான் மதிக்கும் ஒரு நாயகனை விமர்சித்தால் உண்மையாக இருந்தாலும் அது பொறுத்து கொள்ளப் பட மாட்டாது. உணர்ச்சிவசப்பட்டு பொங்கி எழுந்துவிடுவார்கள்.

ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் தேசிய விருதுகளில் அரசியல் கலந்திருக்கிறது என்று நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். எப்போதுமே கருத்து வேறுபாடுகள். இந்த முறை “பிளாக்” என்ற ஹிந்தி படத்திற்கும், அதில் கதாநாயகனாக நடித்த அமிதாப் பச்சனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது குறித்தும் பெரும் சர்ச்சை மாதக் கணக்கில் நீடித்துவருகிறதாம். (2007க்கான தேசிய விருதுகளை அறிவிக்கும் நேரம் வந்து விட்ட நிலையில்) “பிளாக்” படம் “The Miracle Worker” என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல், அதனால் அந்த படத்திற்கு எந்த ஒரு விருதும் வழங்கப்படக்கூடாது என்று தேர்வு குழுவில் அங்கம் வகிக்கும் ஷியாமளா தேவ் பானர்ஜீ கூறுகிறார். பானர்ஜீ தேர்வு குழுவின் மேல் வழக்கு தொடர்ந்து விருதுகளையே நிறுத்தி வைத்து விட்டார். அமிதாபிற்கு போட்டியாக பரிந்துரைக்கப் பட்டிருக்கும் அனுபம் கேர் “நான் இதுவரை தேர்வு குழுவில் அரசியல் கலந்துள்ளது என்று கேள்விதான் பட்டேன்”. இப்போது நானே அனுபவப்பட்டுவிட்டேன்” என்று கோபமாக விமர்சித்துள்ளார்.

1990-ல் வெளியான “அக்னீபத்” என்ற படத்திற்காக அமிதாப் பச்சன் தன் முதல் தேசிய விருதை வாங்கியபோதும் நாடு முழுவதிலும் கலை சினிமா விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்தனர். அவருக்கு அப்போது போட்டியாக இருந்த மலையாள நடிகர் திலகன், அக்னீபத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் “Scarface”-ல் Al Pacino செய்த பாத்திரத்தின் அப்பட்டமான காப்பி என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார். “Front Line”-ல் இதை பற்றிய ஒரு கட்டுரையில் “அமிதாப்” அழகாக வசனங்கள் அவரது அற்புதமான குரலில் பேசுவதையோ, அல்லது அவர் ஜாலியாக காமெடி செய்வதையோஅவரது பாணியில் நடனமாடுவதை ரசிக்கலாமே ஒழிய அவருக்கு தேசிய விருது வழங ்குவதெல்லாம் வேடிக்கையான விசயம்” என்று கூறியிருந்தது.

சிவாஜி கணேசனுக்கோ அல்லது நாகேஷுக்கோ தேசியவிருது கொடுக்கப்படவில்லை என்று இனி தமிழர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம். விருது வாங்கியவர்கள் அனைவரும் தகுதியுடையவர்களா? என்பதே கேள்விக்குரிய விஷயம். “தாதா சாஹிப் பால்கே” விருதில் கூட அரசியல் கலந்துள்ளதை அனைவரும் அறிவோம். பெரும் திராளான ரசிகர்களைக் கொண்டவராக இருந்தாலே “பத்மபூஷன்” கிடைத்துவிடும் என்பது அனவரும் அறிந்த ஒன்று.

குணாவிலும், மஹாநதியிலும் கமல் அதிக ஓட்டுகள் வாங்கியும் அந்த படங்களில் வன்முறை அதிகமாக இருந்ததால் இரண்டாவதாக வந்தவர்களுக்கே கொடுக்கப்பட்டது என்று ஆனந்தவிகடனிலோ அல்லது குமுதத்திலோ நான் படித்தேன். மேலும் கமல் 4 தேசிய விருதுகள் பெற்றுவிட்டார். ஏன் திரும்பத் திரும்ப ஒருவருக்கே கொடுக்க வேண்டும் என்ற (காழ்ப்புணர்ச்சி) எண்ணம்தான் காரணம் என்றும் எழுதியிருந்தார்கள். கமல் பாலிவுட்டைச் சேர்ந்தவராக் இருந்தால் கிடைத்திருக்குமோ என்னவோ?

1991ல் வெளியான மஹா நதியின் கமலுக்கு பதிலாக “பரதம்” என்ற மலையாள படத்திற்காக மோஹன்லாலுக்கு தேசியவிருது வழங்கப்பட்டது. பரதம் படம் தமிழில் கார்த்திக்கும், பி. வாசுவும் நடித்த “சீனு” என்ற படத்தின் மூலப்படமாகும். அதில் கார்த்திக் மோஹன்லாலின் பாத்திரத்தைச் செய்திருந்தார். அதில் விருது பெறும் அளவுக்கு என்ன உள்ளது? என்பது படத்தை பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும். நான் இரு மொழிகளிலும் பார்த்துவிட்டேன். இதுவல்லாமல், உலகத் திரைப்பட விழாவுக்கு கூட கலைப்படங்களுடன் போட்டியிட பெரும்பாலும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களாகத்தான் அனுப்பிவைக்கப்பட்டு முதல் தேர்விலேயே திருப்பி அனுப்பப் படுகின்றன. “ராம்”, “பருத்தி வீரன்”, “வெயில்” போன்ற படங்கள் கூட நன்றாக ஓடியதால்தான் அனுப்பி வைக்கப்பட்டனவோ என்ற சந்தேகம் கூட எழுகிறது.

ஆக இந்த ஆண்டு இந்திய சினிமா தேர்வுக் குழுவின் அப்பட்டமான முறைகேடு வெட்ட வெளிச்சத்திற்கே வந்து கொண்டிருக்கிறது. என்ன நடக்கும் என்று சினிமா ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். குறிப்பாக அனுபம் கேர் தரப்பு, அதற்கும் அடுத்த படியாக இருக்கும் மோஹன்லால் தரப்பும் கூட.

பொறுத்திருந்து வேடிக்கை பார்ப்போம். எது நடந்தாலும் அது தேர்வு அல்ல. அட்ஜஸ்ட்மென்ட் (ஒத்து ஊதுதல் என்று தமிழில் சொல்லலாமா?). கீழே தினமலர் ஹிந்துஸ்தான் டைம்ஸ்-ன் சுட்டிகள்:

http://www.dinakaran.com/cinema/bits/default.asp

http://hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=40de0f95-ce6d-416b-aec6-d8fe6d352cb7&MatchID1=4500&TeamID1=2&TeamID2=6&MatchType1=1&SeriesID1=1122&PrimaryID=4500&Headline=National+awards+row%3a+the+plot+thickens


sadikjafar@gmail.com

Series Navigation

சாதிக்

சாதிக்