தொடரும் ‘ரசவாதம் ‘ -கண்ணனின் எதிர்வினை குறித்து

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


என் கட்டுரைக்கு எதிர்வினையாக கண்ணன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

கண்ணன் EPW கட்டுரையில் உள்ள தகவல்களை தன் பத்தியில் திரிக்காமல் எழுதியிருந்தால் பிரச்சினை இல்லை.அவர் ‘பின் நவீனத்துவ அறிஞர்களை ஏமாற்ற ‘ என்று குறிப்பிடுகிறார்.மூலக்கட்டுரை அப்படி யாரையும் பின் நவீனத்துவ அறிஞர்கள் என்று சுட்டிக்காட்டவில்லை.அது ‘It is now a little over a yesr since the so-called ‘skoal affair ‘ sent shock waves through science studies,cultural studies and other assorted disciplines in the humanities in the North American and European Universities ‘ என்று துவங்குகிறது.கண்ணன் ‘மேற்படி நிகழ்வு பின் நவீனத்துவம் பற்றிய பெரும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது ‘ என்று எழுதுகிறார்.வேறு எதையும் படிக்க வேண்டாம், மூலக்கட்டுரையில் உள்ள தகவல்களைக் கூட ஏன் அப்படி திரித்து எழுதினீர்கள் என்பதுதான் கேள்வி.கறுப்பு தொகுப்பாளர்களுக்கு சோகல் விவகாரம் பற்றித் தெரியவில்லை என்றால் தெரிந்த கண்ணன் அதை முழுமையானத் தகவல்களைக் கொடுத்து விரிவாக எழுதியிருக்கலாம்.அல்லது சுருக்கமாக அது பல துறைகள்/சிந்தனைப் போக்குகள் குறித்த சர்ச்சை என்பதையாவது குறிப்பிட்டிருக்கலாம்.பிறருக்கு ஒரு விஷயம் தெரியவில்லை எனில் அதை தெளிவுபட எழுதி, மேல்விபரங்களுக்கு இந்தக் கட்டுரைகள்/இணைய இணைப்புகளைப் பாருங்கள் என்றும் குறிப்பிட்டிருக்கலாம். பிறர் மீது குற்றம்சாட்டி, கேலி செய்யும் போது குறைந்தபட்சம் சரியான தகவல்களை குறிப்பிட வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயம்தானே ?

மீரா நந்தா ‘Science studies, as I said, is not an ordinary academic discipline. It constitutes the beating heart of postmodernism, for it aims to “deconstruct” natural science, the very core of a secular and modern worldview. ‘(1)

என்று எழுதுகிறார்.அவர் எழுதியுள்ள இந்தக்கட்டுரையையும்,பிற கட்டுரைகளையும் படிப்பவர்கள் அவர் இதை பின் நவீனத்துவம் சார்ந்த/குறித்த பிரச்சினையாக மட்டும் பார்க்கவில்லை என்பதை புரிந்து கொள்வார்கள். science studies என்பது ஒரு academic discipline, பின் நவீனத்துவத்தை அப்படி வரையரை செய்ய முடியாது.இரண்டையும் ஒன்றாக எப்படிக்கருத முடியும்.மேலும் cultural studies and other assorted disciplines என்பது குறித்து கண்ணன் ஒரு வரி கூட எழுதவில்லை.மீரா நந்தா அறிவியலின் தத்துவம், பெண்ணியமும்,அறிவியல் மீதான பெண்ணிய விமர்சனங்கள், post coloninal studies போன்றவை குறித்தும் எழுதியுள்ளார்.இந்தக் கட்டுரையில் மீரா குறிப்பிடுகிறார்.

‘For the sake of full disclosure, let me admit that I was a party to the science wars, from the side of Sokal and other scientists and philosophers of science who find science studies to be both wrong and politically dangerous ‘.

‘I was not being facetious, nor was I stoking the “science wars” when I suggested that there was a dangerous convergence – unintended, surely, but not entirely coincidental – between the social constructivist views of science routinely taught in science studies, women’s studies, postcolonial studies and allied disciplines, and the views of those who defend creation science, Islamic sciences, or, as in the case of India, Vedic sciences. The point I was making was not that the foot-soldiers of religious fundamentalist movements are sitting and poring over the works of David Bloor, Bruno Latour, Donna Haraway or even of that great simplifier, Sandra Harding. They are not – although the more sophisticated among them do cite the classic works of (a hugely misinterpreted) Thomas Kuhn, Paul Feyerabend, and those of local post-colonial and feminist scholars who have popularized the social constructivist critiques of objective knowledge and reason at home. I wanted to show how the promotion of an anti-secularist, anti-Enlightenment view of the world by well-meaning and largely left-wing scholars in world-renowned centers of learning has ended up affirming a view of the world which constitutes the common sense of the rather malign, authoritarian and largely right-wing fundamentalist movements. I wanted to show that that having invested so deeply in anti-modernist and anti-rationalist philosophies, the academic left has no intellectual resources left with which to engage the religious right. ‘

மீரா இது குறித்து எழுதியுள்ள,கிட்டதட்ட அனைத்து கட்டுரைகளையும் நான் படித்துள்ளேன்.அவர் என்ன கூறுகிறார் என்பதை புரிந்து கொள்வதில் எனக்கு சிக்கல் இல்லை.கண்ணனுக்கு எல்லாம் பின் நவீனத்துவமயமாய் தோன்றினால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்.science studies என்றே ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தாலும் பொருத்தமாக இருந்திருக்கும்.க.நா.சு பற்றித்தான் ஒருவருக்குத் தெரியும், சுந்தர ராமசாமி பற்றி தெரியாது என்றால் அவருக்கு சுந்தர ராமசாமி எழுதியதை க.நா.சு எழுதியதாகவா அறிமுகம் செய்யமுடியும்.

அ.மார்க்ஸ்,நிறப்பிரிகை குறித்து நான் விமர்சித்திருக்கிறேன்.சில வாரங்கள் முன் திண்ணை கடிதங்கள் பகுதியில் அ.மார்க்ஸ் குறித்து ஒரு விமர்சனத்தை முன்வைத்திருக்கிறேன்.நிறப்பிரிகையில் கட்டுரை எழுதியிருக்கிறேன்.நான் பரிந்துரை செய்த இரண்டு கட்டுரைகளை நிறப்பிரிகை தமிழில் சுருக்கி வெளியிட்டது.காலச்சுவடு எலூலின் கட்டுரையை அவர் குறித்த குறிப்போ, கட்டுரையின் மூலம் குறித்த முழமையான தகவல்களோ இன்றி வெளியிட்ட போது அக்கட்டுரை எனக்கு பரிச்சயமான கட்டுரை என்பதால் மூலம் இதுவென யூகிக்கிறேன் என்பதை, காலச்சுவடு மூலம் எது என்பதை வெளியிட வேண்டும் என்பதையும் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தேன்.சுந்தர ராமசாமி காலச்சுவட்டில் மொழிபெயர்த்து வெளியிட கட்டுரைகள் குறித்து என் கருத்தைக் கேட்டபோது சில கட்டுரைகளை பரிந்துரைத்து, எப்படிபட்ட கட்டுரைகள் வெளிவரலாம் என்பதை தெரிவித்து இரண்டு கட்டுரைகளை அனுப்பிவைத்தேன்.அதில் ஒன்று மீரா நந்தா எழுதிய கட்டுரை.இன்னொன்று சூமாக்கர் பற்றிய கட்டுரை.

தமிழ் சிறுபத்திரிகை/இணைய இதழ்களில் நான் எழுதுவது எனது கருத்துக்களை தெரிவிக்கவே.இதை காலச்சுவடிற்கு எதிரான குழு அரசியலுடன் தொடர்புபடுத்தி பார்ப்பது தேவையற்றது, பொருத்தமற்றது.கறுப்பு தொகுப்பினை நான் படித்திருந்தால் நானே இதைப் பற்றி எழுதியிருப்பேன்.கறுப்பு தொகுப்பாளர்கள் செய்தது சரி என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை.காலச்சுவட்டில் வெளியானதை விமர்சித்து எழுதினால் அது காலச்சுவட்டிற்கு எதிரான அரசியல் என்று கண்னன் கருதலாம்.ஒருவரால் காலசுவட்டையும் விமர்சிக்க முடியும்,அ.மார்க்சையும் விமர்சிக்க முடியும், இந்தக் குழு அரசியலிற்கு அப்பாற்பட்டு கருத்துகளை கூற முடியும் என்பதை கண்ணன் புரிந்து கொள்ளவில்லை என்று கருதவே அவர் எதிர்வினை இடமளிக்கிறது.

கண்ணன் காலச்சுவட்டில் எழுதி,திண்ணையிலும் பிரசுரமான கட்டுரையில் கீழ்க்கண்ட பகுதி உள்ளது.இது

குறித்து காலச்சுவட்டில் விவாதம் நடந்துள்ளதா அல்லது இது வேறெங்காவது சர்ச்சிக்கப்பட்டுள்ளதா என்பதை

நான் அறிய விரும்புகிறேன். ஏனெனில் காப்பிரைட் (பதிப்புரிமை) குறித்த ஒர் பகடிக்கட்டுரையில் இது இடம்

பெற்றிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்கமாட்டேன்.

காப்புரிமை மீறல் என்பது ஒரு பொருளாதாரக் குற்றம் மட்டுமல்ல அது ஒரு மனித உரிமை மீறலும்கூட. ஏனெனில் காப்புரிமை என்பது தார்மீக ரீதியாக சொத்துரிமையைவிட நியாயமானது. சொத்துரிமையின் அடிப்படை ஒரு இடத்தை யார் முதலில் குடியேறி கைப்பற்றியது என்பதிலேயே உள்ளது. காப்புரிமை ஒருவர் தாமே உருவாக்கிய படைப்பின் மீது கொள்ளும் உரிமையாகும். காப்புரிமை ஒரு குழந்தையின் மீது பெற்றோருக்கு இருக்கும் உரிமையோடு ஒப்புமை உடையது. எனவேதான் சொத்துரிமையை மறுக்கும் மார்க்சியம்கூட காப்புரிமையை மதிக்கிறது.

படைப்பின் மீது மட்டுமல்ல. நாம் உருவாக்கும் கருத்துகளின் மீதும் நமக்கு அறிவுடைமை உரிமை (intellectual property right) உண்டு. ஒரு கட்டுரை எழுதும்போது கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும் மேற்கோள் காட்டுவதும் அடிக்குறிப்பு போடுவதும் இந்த உரிமையை மதிப்பதாகும்.

காப்புரிமையின் புதிய தமிழ் பரிமாணங்கள் கண்ணன்

http://www.thinnai.com/pl08250210.html

இது குறித்து யாரும் விமர்சிக்காமல் இருந்திருந்தால், சோகல் கட்டுரை குறித்து யாரும் கருத்து தெரிவிக்காமல் இருந்திருப்பதில் வியப்பில்லை.

(1)Postmodernism, Science and Religious Fundamentalism:By Meera Nanda http://www.butterfliesandwheels.com/articleprint.php ?num=40

Series Navigation