ஹை கூ…..

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

இமாம்.கவுஸ் மொய்தீன்.இனவெறி படுகொலைகள்
புதுமையல்ல
காந்தியைக் கொன்ற நாடு!

சாலை விபத்தில் மரணம்
செத்துக் கிடந்தது
மனிதாபிமானம்!

மலர்க் கண்காட்சி
அலைமோதும் கூட்டம்
மூளியாய்ச் செடிகள்!

வந்தோர் ரசிக்க
வராதோரைத் தேடும்
கடலலைகள்!

விழித்துத்தான் கிடந்தோம்
வீட்டில் களவு
தொலைக்காட்சி!

வாழ்நாள் சேமிப்பு
பகல் கொள்ளை!
சீட்டுக் கம்பெனிகள்!

வெளிநாட்டு வேலைக்கு
விமானத்தில் பறக்கின்றன
காகிதப் பட்டங்கள்!

பழங்கால அரண்மனை
வௌவால்கள் வாசம்
காலத்தின் கைவண்ணம்!

பாலின்றி செத்தபின்
பால் தெளீப்பு….
குழந்தைக்கு!

ஆடையில் மனிதர்
குளிரில் செம்மறியாடு
கம்பளித் திருடர்கள்!
-இமாம்.கவுஸ் மொய்தீன்.


drimamgm@hotmail.com

Series Navigation

இமாம்.கவுஸ் மொய்தீன்

இமாம்.கவுஸ் மொய்தீன்