ஹைட்ரஜன் ஆற்றலைப் பயன் படுத்த ஆய்வுகள்

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

மார்க் தீசன்


அமெரிக்காவில் சால்ட் லேக் நகரில் அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு பரிசோதனைச்சாலையும் ஒரு தனியார் நிறுவனமும் இணைந்து 2.6 மில்லியன் டாலர் (130 கோடி ரூபாய்கள்) பெறுமானமுள்ள ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இந்த திட்டத்தின் நோக்கம், இன்று இருக்கும் பெட்ரோலிய அடிப்படை பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் ஒரு அணு உலையை உருவாக்குவது.

மிக அதிக வெப்பத்தில் தண்ணீரை ஹைட்ரஜனாகவும் ஆக்ஸிஜனாகவும் பிரித்து அந்த ஹைட்ரஜனை பெட்ரோலியத்துக்கு மாற்றாகப் பயன்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

‘ஹீலியம் குளிர்படுத்த உபயோகப்படும் அதிவெப்ப அணு உலையின் மூலம் உருவாக்கப்படும் ஹைட்ரஜன் பெட்ரோலியத்தை விட விலை குறைந்த அளவில் உருவாக்கும் என்பதை நாங்கள் பரிசோதனைப்பூர்வமாகக் காட்டியிருக்கிறோம் ‘ என்று இந்த பரிசோதனைச்சாலையின் ஆராய்ச்சியாளர் ஸ்டாவ் ஹெர்ரிங் தெரிவித்தார்.

ஒரு கையடக்க புத்தகத்தின் அளவே இருக்கும் ஒரு மாதிரி உலையின் மூலம் அதிவெப்ப ஹைட்ரஜன் பிரிப்பை பரிசோதனை மூலம் செய்து காட்டியிருக்கிறார்கள். இது அணு உலையில் இருக்கும் 1800 டிகிரி பாரன்ஹீட்டை மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.

மின்சாரத்தின் மூலம் தண்ணீரை ஹைட்ரஜனாகவும் ஆக்ஸிஜனாகவும் பிரிக்கும் முறை 150 ஆண்டுகளாக இருந்துவருகிறது. ஆனால், மின்சாரத்தின் மிக உயர்ந்த விலையும், இதன் மூலம் உருவாக்கும் ஹைட்ரஜனின் விலையும் இந்த முறையை வியாபார ரீதியில் பயன்படுத்த தடையாக இருந்தது.

உயர் வெப்ப எலட்ராலிஸிஸ் இவ்வாறு ஹைட்ரஜனை பிரிக்க தேவையான மின்சாரத்தை வெகுவாக குறைக்கிறது. இதற்குப் பதிலாக வெப்ப சக்தியை பயன்படுத்திக்கொள்கிறது ‘ என்று ஜோஸப் ஹார்ட்விக்ஸென் (Ceramatec)கூறுகிறார்.

2017இல் இப்படிப்பட்ட ஒரு அணு உலை தயாராக இருக்கும் என்று அமெரிக்க சக்தி துறை நம்பிக்கை தெரிவிக்கிறது.

இன்று இருக்கும் பெட்ரோலிய அடிப்படை பொருளாதாரத்தை ஹைட்ரஜன் பொருளாதாரமாக மாற்றுவதற்கு பல பத்தண்டுகள் ஆகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் உடனடி ஹைட்ரஜன் பயனாக, தற்போது இருக்கும் கார்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோலுக்கு மாற்றாக ஹைட்ரஜனையும் ஹைட்ரஜன் மூலம் உருவாக்கப்படும் பெட்ரோலையும் உருவாக்கலாம் என்று கருதுகிறார்கள்.

300 மெகாவாட் அணு உலை சுமார் 30000 வீடுகளுக்கு மின்சக்தியையும், அல்லது 50000 பேர்களுக்கு பிரயாண சக்தியையும்கொடுக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு சாதாரண அமெரிக்கர் ஒரு நாளைக்கு 1 காலன் (சுமார் 4.5 லிட்டர்) பெட்ரோலை உபயோகப்படுத்துகிறார் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

இது சுமார் கால் பில்லியன் காலன். இதனை குறைப்பது முக்கியம் என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

—-

Series Navigation