ஹைக்கூ – துளிப்பாக்கள்

This entry is part [part not set] of 28 in the series 20080918_Issue

மாமதயானை[புதுவை]


எந்த பனித்துளிக்குள்
ஒளிந்துகிடக்கிறது……
என் கவிதை.

நிலவை படம்பிடிக்க
முடியாத வருத்தத்தில்……
வற்றியகுளம்.

தெளிந்தநீரில்
முகம்பார்த்தபிறகும்……
தெளியாத மனசு.

பாவலர்கள் எழுதிவிடுவார்களோ
பயந்துமுட்புதரில் மறையும்……
நிலவு.

நிசப்தமாய் இரு
இசை கேட்கலாம்……
ம ழை வ ரப்போகிறது.

தரிசுநிலக்காட்டில்
தவறி விழுந்த காகிதத்தில்……
அ றுவ டைக்கால கவிதைகள்

ஆயிரம்பேர் அழைத்தலும்
ஆகாயத்தில் தான்……
நிலவு.

பச்சைபசேலென
அ டர்ந்த மரக்காட்டில்……
கோடாளிச்சத்தம்

அ ழகிய வண்ணத்துபூச்சி
ப றக்கும் திசையெல்லாம்……
உடன் பறக்கும்மனசு.


manisen37@yahoo.com

Series Navigation