ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல்

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

கூத்தாடி


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் பேட்டி ஆனந்த விகடனில் படித்த பொழுது எனக்கு அவர் மேல் இருந்த எனக்கு இருந்த மதிப்பை மறு சிந்தினைக்கு உள்ளாக்க வேண்டி வ்ந்தது .அதன் தாக்கம் தான் இந்தப் பதிவு.

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வாழும் கலை அமைப்பு மூலம் செய்து வந்தப் செயல்களின் மேல் ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தது . அவர் ஒரு கார்ப்பரேட் சாமியார் மேல் தோற்றம் அழித்தாலும் அவர் மேல் சில தீவிரமான விமர்சனங்களையும் நண்பர்கள் கூறியிருந்தாலும் நான் கண்டு கொண்டதில்லை .

அவரின் இந்தப் பேட்டியில் குறிப்பிட்ட சில விசயங்கள் அவசியமில்லாதவை .கலாச்சேத்திரா பொறுப்பாளர் அவங்க மாணவர்களை இவருடைய நிகழ்ச்சிக்கு அனுப்பாததும் அதற்கான அவர் சொன்னக் காரணம் சரியானதல்ல தான். பரதம் இந்து மதத்தைக் சார்ந்தக் கலைதான் ,இன்னமும் பரதத்தில் இந்து மத கடவுள்களை நோக்கித்தான் அவர்களின் நாட்டியம் இருக்கிறது .அதனால் ஒரு இந்து மத விழாவில் கலந்து கொள்ள மறுப்பதாக சொன்னது முட்டாள்த் தனமாக இருக்கிறது .
ஆனால் இந்த விஷ்யத்தை ரவிசங்கர் ஆனந்த விகடன் போன்ற பத்திரிகையில் சொல்லியிருக்க வேண்டியதில்லை , அதிலும் அவர் கிறிஸ்த்துவர் எனபதல்லாம் தேவையில்லாதது .

அதுவும் ரவிசங்கர் ஒரு இந்து சாமியாராக மேற்கு நாடுகளில் அடையாளம் காட்டிக் கொள்பவர் அல்ல. அவரின் வாழும் கலை அமைப்பு இந்து மதச் சாயல்களைக் கொண்டு இருந்தாலும் அவர்கள் சொல்லிக் கொடுக்கும் பிராணாயாமத்தையும் சுதர்சன் கிரியையும் ஒரு பயிற்சியாக சொல்லிக் கொடுப்பது போன்று தான் இருந்தது .அவரின் இந்த கோர்ஸ்களில் பல கிருத்துவ ,யூத ,இஸ்லாமியர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றிருக்கிறார்கள் .
அது தான் எனக்கு ஆச்சிரியமாக இருக்கிறது மேற்கில் ஒரு முகமும் இந்தியாவில் இந்து முகமுகாவா இருக்கிறார் ?

பரதமும் ,பிராயாணமும் ,யோகாவும் இந்து மத அல்லது இந்தியத் தரிசனங்களின் வழியாக வந்தது தான் ஆனால் யோகா இன்று உலகம் முழுவதும் இந்து மதச் சாயலின்றி எல்லா மக்களாலும் பயிலப்படுகிறது .ஓரு நல்ல விசயம் எப்படியாவது பலர் பின்பற்றினால் நல்லது தானே .யோகா இந்தியாவுக்கும் இந்து மதம் மேலும் நல்ல மதிப்பைத் தந்துள்ளது ,நாம் நம்பும் விசயம் உலகத்திற்கு உதவும் என்றால் மற்ற மதத்தவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தாமல் செய்ய முடியும் என்றால் மதத்தை தூக்கி குப்பையில் போடுவது தான் சரி. நல்லதைச் சொல்லவும் நல்லதைச் செய்யவும் மதம் தேவையில்லாதது.
அது தான் சரியான ஆன்மீக வாதியின் அடையாளம் ஆன்மீக வாதிகள் மதம் தாண்டி இருப்பது தான் சரி ,இவரும் அப்படிப் பட்டவராகத் தான் தெரிந்தார் , இல்லை என அதேப் பேட்டியில் சொல்லுகிறார் ,இந்து மதத்தில் தீவிரவாதம் வளர்வதுக்குக் காரணம் சிறுபான்மையோரின் இது மாதிரியான நடைவடிக்கைத் தான் என்கிறார் .இது ஒரு அரசியல் தலைவருக்கானப் பேச்சு 🙁 ஆன்மீகவாதிக்கானது அல்ல …தொடர்ந்து மத மாற்றம் பற்றி சொல்லுகிறார் ,நாகலாந்தின் கிருத்துவத் தன்மையும் அவர்களின் தனிநாடுப் போரட்டத்தையும் மத மாற்றத்திற்கு முடிச்சுப் போடுகிறார் ..மதமாற்றம் நாட்டின் ஒருமைப் பாட்டிற்கு எதிரானது என்பதாகத் தான் அவரின் பேட்டி இருக்கிறது .காஷ்மீர் பிரச்சினைக் கூட அப்படிபட்டது போன்றுப் பதில் சொல்லியிருக்கிறார் …பாலீஷான இந்துதுவப் பேட்டி..

இவர் அடிக்கடி வந்து அமெரிக்க மக்களை உய்விக்க நடத்தும் கோர்ஸ்களுக்கு சதன் பாப்டிச்டுகள் இந்த மாதிரி எதிர்ப்பு கொடுத்தால் இவர் அப்ப என்ன சொல்லுவார்ன்னு தெரியல்ல ?

அமைதியாக வாழ வாழ்வதற்கு வழி சொல்லிக் குடுப்பவர்களுக்கே இந்த மாதிரியான் சிந்தனையென்றால் எங்கப் போய் முட்டிக் கொள்வது ?


Series Navigation

கூத்தாடி

கூத்தாடி