வெளி.காம் (vezhi.com) இலக்கிய இதழ் -அறிமுகம்

This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

அறிவிப்பு


சீரிய இலக்கிய சிற்றிதழ்களைப் போலவே இணைய இலக்கிய இதழ்களும் பல சிரமங்களோடு தான் வெளிவருகின்றன. காலத்துக்குக் காலம் சில நின்று போய்விடுகின்றன. வர்த்தகத் தனமில்லாத தணியாத இலக்கிய தாகமுள்ளவர்கள் இந்தத் துறையை விட்டுவிலகிப் போக முடிவதில்லை.

இத்தககை சூழலில் புதிதாக வெளி.காம் (vezhi.com) அறிமுகம் செய்யப்படுகிறது.

மாதம் ஒருமுறை என்ற அடப்படையில் வெளிவந்திருக்கிறது முதல் இதழ். சேரன், செழியன். இளங்கோ, றஷமி, தேவேந்திர பூபதி முதலாய கவிஞர்களின் கவிதைகள், திலகபாமாவின் சிறுகதை, வெங்கட்சாமிநாதனின் கட்டுரை, கருணாவின் ஓவியம், கடற்கோள் கவிதை மீதான திருமாவளவனின் மீள் வாசிப்பு என பல அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

யூனிக்கோட் அல்லாத பாமினி எழுத்துரு மூலம் அமைக்கப்பட்டிருக்கிறது இவ் இயையத்தளம். யூனிக்கோடில் வதிபவர்களுக்கு இது சற்று சிரமம் தந்தாலும் உள்ளே உள்ளவை நல்லவை என்ற நம்பிக்கையைத் தருகிறேன்.

பாமினி எழுத்துருவை உங்கள் கம்பியூட்ரில் இறக்கி படியுங்கள். உங்கள் கருத்துக்களை பதிவுசெய்யுங்கள்.

முடியும் வரையில் முயல்வோம்.

திருமாவளவன்

thiruma@vezhi.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு