This entry is in the series 20090618_Issue

ஹெச்.ஜி.ரசூல்


பாறைப் பள்ளியை
திரும்பத் திரும்ப முத்தமிடும்
மெளன அலைகள்
கடல்தூவல் நுரைகளை வீசித்தெறித்து
அல்லும் பகலுமற்ற
ஓயாத சலனத்தில் எப்போதும்
கடலில் தூக்கி வீசிய போது
அலைகளின் அடியாழத்தில்
தொலைந்து போனது வெண்சங்கு.
அதிசயத்தில் ஆழ்த்த
சங்குமுகத்தின் அலைகளில் மிதந்து
திரும்பி வந்தது வெண்சங்கு
நான் பெயர் சொல்லி அழைத்தபோது.


Series Navigation