விரைவில் இலண்டனில் ஈழத்து தமிழ் நூற் கண்காட்சி – 2008

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

அறிவிப்பு


ஈழத்து, புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்து வடிவங்கள் காட்சியில் இடம்பெறும். அரசியல், அழகியல், ஆன்மீகம், இதிகாசம், இசையியல், சமயம், வரலாறு, ஓவியம், ஓலைச்சுவடிகள், நாவல், நாடகம், சிறுகதை, சிறுவர் இலக்கியம், கவிதை, திரைப்படப்பிரதி, தொல்லியல், நூலகவியல், போராட்டப்பதிவுகள், சிறுசஞ்சிகை, விவசாயம், புவியியல், சோதிடம், மொழிபெயர்ப்பு…. என விரியும் ஈழத்து நூல்களின் கண்காட்சி.

உங்கள் படைப்புகளுடன் படித்து முடித்த நூல்களும் ஈழத்து எழுத்தாளர்களின் ஒலி, ஒளி இழை நாடாக்களும் அனுப்பலாம். அனைத்து எழுத்தாளர்களின் பழைய புதிய படைப்புக்களையும் அமரத்துவமான படைப்பாளிகளின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களையும் அனுப்புங்கள்.

இந்தக் கண்காட்சிக்கு தங்களால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புகட்கு:-

R.MAHENDRAN
34 RED RIFFE ROAD
PLAISTOW
LONDON
E13 OJX

Tel: 0208 5867783
Email: mullaiamuthan_03@hotmail.co.uk

Series Navigation