This entry is in the series 20031120_Issue

நெப்போலியன்,சிங்கப்பூர்


என்
நினைவுக் குமிழ்கள்
உடைந்து ஓடுகையில்
உள்ளுக்குள்
பிரிகைகளாய்
நீ…

கிரகணம் கவ்விய
இருட்டாய்
இதயம்
மிரட்டும்
என் அந்திகளில்…

சாம்பல் குவிந்த
மயான நிசிகளின்
நிரந்தர ஓலம்
உன்னால்
எனக்கு…

மத்தியான
உச்சிகளிலும்
சாயங்கால
இறுதிகளிலும்
சட்டென
நாக்கு தொங்கி
மறைவாய்…

கூடத்தில்
குளிப்பாட்டிக்
கிடத்திய கணங்களும்…

கழுத்தில்
பதிந்திருந்த
சுறுக்கு மிச்ச நீலமும்…

கண்களில்
நிலைகுத்தியிருந்த
கடைசி நேர
மரணமுண்டலுமாய்…

நீ
தொங்கிய வீட்டில்
உன்
நினைவாய்
நான்……
————-
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation