வா வா வா…!!!

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

கோச்சா ( எ ) கோவிந்த்


இளைய தலைமுறையே
எழுந்து வா…!!!
இணைய தலைமுறை
தமிழகத்தின்
தலைவிதி மாற்ற
இணையம் மூலம்
திக்கெட்டும்
திரண்டு வா…!!!
வெகுண்டு வா…!!!
—-
இன்னும் எத்தனை நாள்
அரசியல் உனக்கு
அந்நியமாக.. ?
அதனால் தான்
அநியாயம் ரொம்ப
அதிகமாக-
தமிழக வாழ்வில்..!!!
—-
அட்சயப் பாத்திர
வாக்குச் சீட்டை
அரசியல்வாதியிடம்
தொலைத்து விட்டு
அவன் பின்
பிச்சை கேட்டு
அலைவது தடுக்க….
—-
பாண்டரா கெளரவரா
யார் ஆள – எனும்
கேள்வி ஏன்… ?
பாரத நாடு
ஜனநாயக நாடு
என்றுணர்ந்து
உன்னில்
ஒருவனை முதல்வனாக்கு…
அவன்
அரியணை ஏறி
மக்களை மறந்தால்
அறவே ஒதுக்கியெறி..!!!
—-
கலந்தாலோசனை
கருத்து பறிமாற்றம்
திட்ட வடிவு
செயல் ஆக்கம்- என
அறிவி பூர்வ
ஆட்சி காண
கணணியின் மூலம்
மக்களைத் திரட்டு…!!!
—-
ஒட்டு மொத்த தமிழரும்
ஒன்றிணைந்து தேடினால்
உயர்தெழுவான்
புதுத் தலைவன் நமக்கு…!!!
—-
gocha2004@yahoo.com

Series Navigation