வாழ்க்கை நெறியா இந்து மதம்

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

கூத்தாடி



இந்து மதம் குறித்த விவாதங்களில் ஒரு சமயம் மாற்று மொழி நண்பர் ஒருவர் சொன்னது பிரபலமான சுப்ரீம் கோர்ட் வசனத்தை ” இந்து மதம் ஒரு வாழ்க்கை நெறி (way of life) என்று சொன்னார் இதை பல இடங்களில் நானும் சொல்லியிருக்கிறேன் ,பல முறை பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் . ஆனால் இப்ப சொன்ன நண்பர் தீவிர இந்துவத்துவ வாதி எந்த வாய்ப்புக் கிடைத்தாலும் முஸ்லீம்களை இழுக்காமல் இருக்க மாட்டார் , நான் எப்பொழுதும் தீவிரமாக எதிர் வினையாற்றுவேன் .

என்னுடைய கேள்வி – அப்படின்னா என் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள முஸ்லீம் கிருத்துவ நண்பர்களும் ஒரே மாதிரி தானே வாழ்கிறோம் அவங்களையும் இந்துன்னு சொல்லலாமா ?

பதில்: அப்படிச் சொல்ல முடியாது ,அவங்க எல்லாம் மாமிசம் / மாடு சாப்பிடுவார்கள் .

நான்: நானும் தான் சாப்பிடுவேன் ,நான் இந்துவா இல்லையா ?

பதில் : ஆனா அவங்கள்ளாம் மாமிசத்த சாமிக்கு படைபாங்க இந்துக்கள் பண்ண மாட்டாங்க

நான் : அப்படியா ..அப்ப மாமிசத்த சாமிக்கு படைக்கிற மக்கள் எல்லாம் இந்து இல்லையா ?

பதில் : அப்படின்னு வச்சிக்கலாம்

நான் : ஓ அப்படின்னா இந்தியா இந்துக்கள் அதிகமாக இருக்கும்ன்னு சொல்லுவது தப்பில்லையா ..எங்க ஊர்லேல்லாம் பழய காலத்தில் ஆடு /கோழி வெட்டுறப் பழக்கம் நிறைய இருந்தது அவங்கள்ளெல்லாம் இந்து இல்லைன்னா சொல்லுறீங்க

பதில்: ம்ம் அவங்க கணபதிக்கும் /கிருஷ்ணனுக்குமா படைக்கிறார்கள்

நான் : நீங்க சொல்வது கணபதியும் கிருஷ்ணனும் தான் இந்து தெய்வங்களா

பதில்: நாங்கள்ளாம் அவங்களதான் கும்புடுறோம் ,பெரும்பாலோனார் அப்படிதான் கும்பிடுறாங்க ..

இப்படியாக வாதம் தொடர்ந்து கொண்டிருந்ததில் வழக்கம் போல் எந்த முடிவும் இல்லாமல் பை பை சொல்லி எந்திருத்துப் போய் விட்டோம் ..

ஆனால் பொதுவாக நம்முடையே இந்த குழப்பம் இருப்பதைப் பார்க்க முடியும் . பொதுவாக இந்து என்பது வாழும் வழிமுறை என்று சொல்லுவது பொருந்துமா ?

அப்படி என்றால் இந்து மதம் வாழும் வழி என்பது ஒத்துக்கொள்ள முடியுமா .ஒரு உச்ச நீதி மன்ற நீதிபதி சொன்னதற்காக அதையே தூக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறோமா ?

அப்படியே அவர் சொன்னது சரியானது என்றால் எந்த விதத்தில் வாழ்வது இந்துமத வாழ்க்கை ?

இந்துக்கள் என்ப்படுவோர் எல்லோரும் ஒரே மாதிரியாகவா வாழ்கிறார்கள் அவர்களின் பிறப்பு ,திருமண ,இறப்புச் சடங்குகள் ஒரே மாதிரியாகவா இருக்கிறது ? சனாதான தர்மம் தான் இந்து மதமா ?

சாதி என்பது மட்டுமே இந்து மதத்தின் தன்மையெனில் இந்தியகிருத்துவத்தையும் இந்து மத்தோடு சேர்த்துக் கொள்ளலாமா ?

இந்துக்கள் என்பது யார் என்பது சரியாக வரையறுப்பது கடினம் . இந்து மதம் எல்லாச் சமயங்களிலும் இருந்த கருத்துக்களை எடுத்துக் கொண்டதாகக் கூறுவார்கள் .பெளத்தமும் சமணத்திலிருந்து எடுத்துக் கொண்டதுதான் ஊன் உண்ணாமை என்பதற்கு வேதங்களில் இருக்கும் சாட்சிகளே அதிகம் .புததர் எதிர்த்ததே இந்துக்களின் சடங்குகளையும் பரிகாரங்களயும் அதைச் செய்யும் புரோகிதர்களையும் தான் .புத்தரை கொல்ல முயற்சித்தவர்கள் அனைவரும் அக்கால வேத வழிவந்தவர் களே . இந்து மதம் செய்து கொண்ட சமரசமே இந்து மதத்தை இவ்வளவு நாளும் இந்தியாவில் விட்டு வைத்து இருப்பதாகக் கொள்ளலாம் .புத்த மதம் இந்தியாவில் சமரசம் செய்து கொள்ளாததே புத்த மதம் இந்தியாவில் அழிந்ததற்கானக் காரணம் என்பது ஒஷோ வின் கூற்று.

ஒரு வகையில் சமணர்களும் ,பெளத்தர்களும் இந்து மதத்தின் ஆணி வேரை எதிர்த்து வந்த மதங்கள் தான் .சமணர்களிடமும் ,புத்தரிடமும் கடன் வாங்கியது தான் புலால் உண்ணாமை என்று சொல்கிறார்கள் .கொழ்சம் போல் இருக்கும் சமணர்கள் இன்று சமரசம் செய்து கொண்டு தீவிர இந்துத்துவ வாதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பது காலம் மதங்களின் மேல் செய்யும் விந்தைக்கு உதாரணம்.

இந்துக்கள் என்பவர்கள் பல தரப்பட்ட கலாச்சாரத்தில் தானே வாழ்கிறோம் .. சைவ / வைணவ மதத்தின் இணைப்பு தான் இந்து மதம் என்று சொல்ல முடியாது ..சொடலை மாடன் /வண்டி மலச்சி அம்மன் / சாத்தா வழிபாடு / ஐய்யனார் போன்ற நாட்டார் வழிபாடு முறைகளயும் இந்து மதத்தின் கூறுகளாகத் தானேப் பார்க்கிறோம் அந்த் வகையில் கிருத்துவமும் /இஸ்லாமும் /பெளத்தமும் /சீக்கியமும் இந்து மத்த்தின் பிரிவு தான் என்று ஒத்துக்கொள்ள முடியுமா ? அவர்கள் (இந்து மதமல்லாதவர்கள்) இதை ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை ? முதலில் இந்துக்கள் ஒத்துக் கொள்ளுவார்களா ?

எல்லா இறையும் ஒன்றுதான் என்று கொள்பவர்கள் ஒத்துக் கொள்ளலாம் அவர்களுக்கு மதமமென்பது கிடையாது .

பெரும்பாலோனோர் மதம் என்பதே do & donts தான் .சைவன் நெற்றியில் திருநீறு /வைணவன் திருமண் /இஸ்லாமியர்களுக்கு ஹராம் / ஹலால் / கிருத்துவருக்கு ஞான்ஸ்தானம் போன்றவைகள் தான் அவர்களை மத ரீதியாக வைத்துள்ளது .

கிருத்துவர்களுக்கும் /முஸ்லீம்களுக்கும் அசைவம் உண்ணுவது பற்றி ஒரு தடையும் இல்லை .இந்துக்கள் மாமிசம் சாப்பிடுபவர்களாக இருந்தாலும் அவர்களில் பெரும்பான்மையோர் திருவிழா சமயங்களிலும் கோவில் செல்லும் போதும் உண்பதில்லை , மாட்டு மாமிசம் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை ?

இப்படி சிந்திக்கும் போது தோன்றுவது என்னவென்றால்

மதம் என்பதே எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதைச் சொல்வதும் எப்படி இறைவனை வணங்க வேண்டும் என்பதைத் தான் மதங்கள் சொல்லுவதாகப் படுகிறது அதற்கு ஒரு சட்டப் புத்தகம் போதாது ? சாப்பிடுவதும் எப்படி உடைகள் உடுத்துவதும் தான் மதமா என்ன ?

அப்படித் தான் மதமே உடைகள் உடுப்பதையும் எதைச் சாப்பிடுவதும் தான் மதமென்றால் எல்லா மதமுமே வாழும் வழிமுறை தான் .

http://koothaadi.blogspot.com
koothaadi@gmail.com

Series Navigation