வானகமே. . வையகமே. . .சுற்றுச் சூழலுக்கென்று முதன் முதலாக தமிழில் நடத்தப்படும் இலவச இரு மாத இதழ்

This entry is part [part not set] of 28 in the series 20051104_Issue

அறிவிப்பு


சுற்றுச் சூழலுக்கென்று முதன் முதலாக தமிழில் நடத்தப்படும் இலவச இரு மாத இதழ் வானகமே. . வையகமே. . .

ஆகும். இவ்விதழ் உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி சூன் 2005ல் வெளியிடப்பட்டது. வணிக நோக்கமின்றி சில சுற்றுச் சூழல் ஆாவலாகள் மற்றும் நண்பாகளின் ஒத்துழைப்பில் கவிஞர் வைகைச் செல்வியின் முயற்சியால் இப்பத்திாகை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் சிறப்பு அம்சங்கள்

எட்டு பக்கங்களில் அழகிய வண்ணத்தில் வெளி வரும் இவ்விதழில் சுற்றுச் சூழல் சம்பந்தப்பட்ட நிபுணா ஒருவரின் நேர்காணல், அன்றும். . .இன்றும் என்ற தலைப்பில் ஒரு நகரத்தின் இன்றைய சுற்றுச் சூழல் நிலைமை, சுற்றுச் சூழல் கவிதை ஆகியவை ஒவ்வொரு இதழிலும் இடம் பெறும். கவிஞர் வைகைச் செல்வி சுற்றுச் சூழல் பற்றிய தனது கருத்துக்களை இது நம்ம பூமி யில் பகிாந்து கொள்கிறார்.

முதலாம் இதழில், திருப்பூர் கிருட்டிணனின் பனியன் நகரம் என்றழைக்கப்படும் திருப்பூா நகரத்தின் இன்றைய நிலைமை பற்றிய குறிப்புகள், தியடோர் பாஸ்கரனின் நேர்காணல் இடம் பெற்றுள்ளன. தமிழ் நாட்டில் திடக் கழிவு மேலாண்மையில் முதலிடம் வகிக்கும் தர்மபுா மாவட்ட பாலக்கோடு சிற்றுாராட்சியின் வெற்றி அனுபவத்தை முனைவா ப. ராச சேகா பதிவு செய்துள்ளாா. தமிழக அரசின் சுற்றுச் து dழல் துறை இயக்குநா முனைவர் சீனி பாலாஜி இ.வ.ப., பத்திரிகையாளாகள் மாலன், சுகதேவ் அண்ணா பல்கலைக்கழக இயக்குநா சீதரன் போன்ற பிரபலமானோர் வாழ்த்துச் செய்தி வழங்கியுள்ளனா.

செப்டம்பா – அக்டோபா2005க்கான இரண்டாம் இதழ் ஓசோன் படலச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. கனடாவில் வாழும் விஞ்ஞானியும் எழுத்தாளருமான ஜெயபாரதன் கட்டுரை..அன்றும் இன்றும் பகுதியில் வல்லிக்கண்ணனின் நெல்லை பற்றிய நினைவலைகள், சென்னையிலுள்ள மணலி பெட்ரோ கெமிக்கல்சின் R&D Lead Executive மீனாட்சி சுந்தரத்தின் நேர்காணல் , சாரதா டெக்ஸ்டைல்சின் மதலை முத்துவின் எதிா சவ்வூடு ப

‘c3வுதல் பற்றிய தகவல் ஆகியவை இடம் பெற்றுள்ளன

மேலும் வானகமே..வையகமே… சாாவில் பல சுற்றுச் சூழல் நிகழ்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு சுற்றுச் சூழல் கலைக்குழு ஆரம்பிக்கப்பட உள்ளது. .

ஆசிரியர் குழுவில் கீழ்க்கண்டோர் உள்ளனர்.

எஸ்.வி.கோபால்

மு. கலைவாணன்

வில் விஜயன்

முனைவா ஸ்டான்லி ஜோஸப்

பத்திாகையின் மின்னஞ்சல்

skyandearth2005@yahoo.co.in

பத்திரிகையின் இணைய முகவரி

http:\www.koodal.comvanagamaevaiyagamae

உலகளாவிய வகையில் சுற்றுச் சூழல் விடயங்களில் அக்கறையுள்ளவாகளும் ஆர்வலர்களும் பத்திரிகையாளர்களும் இப்புதிய முயற்சியில் கலந்து கொள்ள வேண்டுமென்பதே எங்கள் ஆவல். எனவே விருப்பமுள்ளர்கள் கவிஞர் வைகைச் செல்வியைத் தொடர்புகொள்ளவும்

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு