வயதுகளோடு….

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

மதியழகன் சுப்பையா


வயதுகளோடு
மறைந்து விடுகிறது எல்லாம்

படுக்கையில்
மூத்திரம் கழிந்தது

உமாவோடு
ஒட்டிப் படுத்தது

ஐந்து வயதில்
அப்பா இறந்து போனது

முதல் முகச் சவரத்தில்
முகம் பற்றி எரிந்தது

அக்காவை
அவனுடன் பார்த்து
ஆத்திரப் பட்டது

ஒரு தலையாய்
காதலித்தது

கதவிடுக்கு வழியாய்
குளிப்பதைப் பார்த்தது

முதலிரவில்
முரட்டுத்தனமாய்
இயங்கியது

மகனின் முகத்தை
உற்றுப் பார்த்து
உறுதிப் படுத்துக் கொண்டது

அவளின் சாவு

மருமகளின்
பிச்சையாய் உணவு

பேரனின்
கிண்டல்

வயதுகளோடு
மறைந்து விடுகிறது
எல்லாம்

மதியழகன் சுப்பையா
மும்பை
madhiyalagan@rediffmail.com

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா