வகாபிகளின் புதிய திருக்குர் ஆன்

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

ஹெச்.ஜி.ரசூல்


இப்னுபசீர் சென்றவார தனது திண்ணை விவாதத்தில் இரு கேள்விகளை கேட்டிருந்தார்.
கேள்வி1
எழுத்தாளர் வகாபி அப்துல்வகாபை அல்லாவாக உருவகப்படுத்தி இருந்தார் என்றால் அதை ஹெச்.ஜி.ரசூல் சுட்டிக் காட்ட முடியுமா..
பதில்
அ)நபிமுகமது வகாபிகளின் தலைவரல்ல
ஆ)வகாபிசம் என்பது இஸ்லாமல்ல
இ)(அப்துல்)வகாபின் கருத்து திருக்குரானல்ல
என்பதை முதலில் வாசகர்கள் தெளிவாக்கிக்கொள்ள வேண்டும்.

உதாரணத்துக்கு வகாபியின் திண்ணைக் கடித நாள்:பிப்ரவரி 24,2006 சில பகுதிகள்

முதல் குழப்பம்
…….அதென்ன தமிழ்சூழல் சார்ந்த பண்பாட்டு இஸ்லாத்தின் உயிர்ப்புக்கூறுகள் என்று வாசகர்கள் அதிகம் குழம்ப வேண்டாம். வகாபிகளின் தலைவர்(அல்லது முகம்மது ஸல்லல்லாஹ் அலைகிவஸல்லம்)அவர்களின்……….

(இப்பகுதியில் வகாபிகளின் தலைவராக நபிமுகம்மதுவை சொல்லுகிறார்.ஆனால் உண்மையில் வகாபிகளின் தலைவர் முகமது இப்னு அப்துல் வகாபு என்பவரே. இவ்விடத்தில் வகாபிகளின் தலைவர் அப்துல் வகாப் நபிமுகமதுவாக உருமாற்றிக் காட்டப்படுகிறார்.

இரண்டாம் குழப்பம்

தொடரும் அக் கடிதத்தின் சில பகுதிகள்….
…….இறை வாக்கில்(அல்லது வகாபுடைய அறவுரையில்) அவருடைய பார்வையில்…..

…….அறிவு நிலைப்பட்ட விவாதம் வேண்டுமென்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. இறைவாக்கின் உருவாக்கம் (அல்லது வகாபு அனுப்பிய வஹி) குறித்தும்……..

(இப்பகுதியில் இறைவாக்கை,வஹியை வகாபுடைய அறவுரையாகச் சொல்லுகிறார்.அல்லா வகாபு எங்கு சென்றும் அறவுரைகளை நிகழ்த்தியதில்லை.இங்கு கேள்வி எழுகிறது.எந்த வகாபு?

அல்லாவின் பெயரான வகாபா… அல்லது வகாபிகளின் தலைவரான (அப்துல்)வகாபா…? இங்குதான் எழுத்தாளர் வகாபி தனது கலங்கலான குழப்பமான மொழியின் வழியாக அப்துல் வகாபை அல்லா வகாபாக உருவகப்படுத்த துவங்குகிறார்,இரண்டு வித அர்த்தம் தொனிக்கும் வார்த்தையாக அது மாறுகிறது.

ஏனெனில் வகாபிகளின் தலைவர் அப்துல் வகாபை நடைமுறை பயன்பாட்டு வழக்கில் வகாபு என்றே கூறுகிறோம்.

இங்கே அல்லாவிற்கு 99 பெயர்கள் இருக்க வகாப் என்ற பெயரை மட்டுமே பயன்படுத்துவதின் உள் நோக்கம் அல்லாவகாபை அப்துல்வகாபாக உருமாற்றுவதுதான்.

பெயர் குழப்பத்தின் மூலமாக கருத்தியல் குழப்பத்தை உருவாக்குவதுதான்.

அதுமட்டுமல்ல உண்மைப் பெயரை மறைத்துவிட்டுதனது பெயரை வகாபி என்று அறிவித்து மேலும் குழப்பத்தையே விளைவித்துள்ளார்.

எனவேதான் எனது முந்தைய கடிதம் ஒன்று அல்லாவும் வகாபும் வேறுவேறு என்பதை விளக்கிக் காட்டியது.

கேள்வி 2
அல்குர் ஆனின் கொள்கையிலிருந்து இமாம் அப்துல்வகாபின் கிதாப் அல் தவ்கீத் எவ்வாறு வேறுபடுகிறது ? ஹெச்.ஜி.ரசூல் விளக்குவாரா..?
பதில்
இக்கேள்விக்கு பதிலை இப்னுபசீர் அறியாதவரல்ல ஆனால் அவரின் உள்நோக்கம் திருக்குர் ஆனிலிருந்து(இஸ்லாம்)கிதாப் அல் தவ்கீத்(வகாபிசம்)வேறுபடுவதின் விசயத்தை விளக்குவதின்வாயிலாக என்னிடமிருந்தே வகாபிய பிரச்சாரத்தை உருவாக்க நினைக்கிறார். எனவே திருக்குர் ஆனும் கிதாப் அல் தவ்கீதும் ஒன்று என்று இப்னுபசீரே விளக்கட்டும்.

ஆனல் அதற்குமுன் ஒன்று

திருக்குர் ஆன் கருத்துக்கள் கிதாப் அல் தவ்கீதில் இருக்கிறது என்றால் திருக்குர் ஆனே போதுமே. எதற்கு கிதாப் அல் தவ்கீதை (அப்துல்)வகாபு எழுத வேண்டும்.

உன்மையில் வகாபிகளின் நடைமுறையை கூர்ந்து கவனித்தால் மிகைப்படுத்தப்பட்ட இணைவைத்தல்கருத்தியல்சார்ந்த கிதாப் அல் தவ்கீதுதான் வகாபிகளின் புதிய திருகுர் ஆன்.
எனவேதான் வகாபிகள் தர்காக்களை இடிக்க கடப்பாரைகளை தூக்கிக் கொண்டு வருகிறார்கள். சூபிஞானிகளின் சமாதிகளை தோண்டிப்பார்க்க மண்வெட்டிகளோடு அலைந்து திரிகிறார்கள்.

இதுதான் வகாபிசத்தின் அழிப்பின் தத்துவம்.
——————————————————–

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்