ருசி

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

இளைய அப்துல்லாஹ்


அட்டைக்குத்தெரியும் என் ரத்தத்தின் ருசி
கண்ணுக்கெட்டும்வரை காடுகள்
காடுகளின் மணம் ஒரு உச்சாய்ப்பானது
மணக்கவென்றே காடுகளுக்குள் செல்கிறேன்
பாம்புகளின் கொட்டாவி
சில் வண்டுகளின் மூச்சு
தேளின் சுவாசம்
யானையின் மணம் குழுமாட்டின் வாடை
மான்,மரை,சருகுகள்,பூக்கள்,மூலிகை,
பச்சிலை,ஆறு,பனி எல்லாம் கலந்த கலவை
காட்டின் மணம்
இத்தனை மணங்களையும் பிரிக்க
உணர் கொம்புகள் இல்லை என் மூக்கிடம்
ஒன்றான சுவாசத்தை உள்ளிளுக்கும்
ஒற்றை உணர்வோடு திரிகிறேன்
இயலாமையின் வடிவத்தோடு
பூமியின் அத்திவாரம் காடு
‘ஆபத்தானவை காடு ‘ என்று எழுதிவைத்தவனை சபித்தேன்;
என் மனதோடு சேர்ந்து நடுக்காட்டுக்குள்
செல்பவர்கள் எவரோ வாருங்கள்!
ஒரு நண்பனைப்போல காடு.
பயப்படுவதற்கு மனிதனுக்கு மட்டும்தான் தெரியும்
மனிதனைத்தவிர வேறு எதுவுமே
அச்சமடைவதைக்கண்டதுண்டா ?
காலில் இரத்தம் வருகிறது
ஒரு பாம்பு எனது இரத்தத்தை
தனது நாக்கால் சுவைத்தது..

காடு எவ்வளவு அழகானது.

26.02.2005

இளைய அப்துல்லாஹ்

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்

ருசி

This entry is part [part not set] of 25 in the series 20050429_Issue

இளைய அப்துல்லாஹ்


அட்டைக்குத்தெரியும் என் ரத்தத்தின் ருசி
கண்ணுக்கெட்டும்வரை காடுகள்
காடுகளின் மணம் ஒரு உச்சாய்ப்பானது
மணக்கவென்றே காடுகளுக்குள் செல்கிறேன்
பாம்புகளின் கொட்டாவி
சில் வண்டுகளின் மூச்சு
தேளின் சுவாசம்
யானையின் மணம் குழுமாட்டின் வாடை
மான்,மரை,சருகுகள்,பூக்கள்,மூலிகை,
பச்சிலை,ஆறு,பனி எல்லாம் கலந்த கலவை
காட்டின் மணம்
இத்தனை மணங்களையும் பிரிக்க
உணர் கொம்புகள் இல்லை என் மூக்கிடம்
ஒன்றான சுவாசத்தை உள்ளிளுக்கும்
ஒற்றை உணர்வோடு திரிகிறேன்
இயலாமையின் வடிவத்தோடு
பூமியின் அத்திவாரம் காடு
‘ஆபத்தானவை காடு ‘ என்று எழுதிவைத்தவனை சபித்தேன்.
என் மனதோடு சேர்ந்து நடுக்காட்டுக்குள்
செல்பவர்கள் எவரோ வாருங்கள்!
ஒரு நண்பனைப்போல காடு.
பயப்படுவதற்கு மனிதனுக்கு மட்டும்தான் தெரியும்
மனிதனைத்தவிர வேறு எதுவுமே
அச்சமடைவதைக்கண்டதுண்டா ?
காலில் இரத்தம் வருகிறது
ஒரு பாம்பு எனது இரத்தத்தை
தனது நாக்கால் சுவைத்தது..

காடு எவ்வளவு அழகானது.

26.02.2005

இளைய அப்துல்லாஹ்

anasnawas@yahoo.com

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்