ரஜினி – ஷங்கர் ‘சிவாஜி ‘ தேறுமா… ?

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

வினோத்


இரண்டு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது அதுவும் 40 கோடிக்கு.

நிச்சயம் வியாபார ரீதியாக சாதனை தான்.

ஆனால், தரமான படைப்பாக இருக்குமா… ? சந்தேகம் தான்.

ஏன்,

ரஜினிக்கு சம்பளம் 15 கோடி. அதில் 10 கோடி தந்தாகி விட்டது.

சங்கருக்கு 5 கோடி.

தயாரிப்பாளர் தனக்கென குறைந்த் பட்சம் 10 கோடிக்காகவாவது திட்டமிட்டிருப்பார்.

மிச்சம், 15 கோடியில், மீத பணியாளர்களுக்கு சம்பளம் அப்பறம் பிலிம் செலவு…ஷுட்டிங் இத்யாதி இத்யாதி….

அப்படியானால், இது தரமான படமாக இருக்கும் வாய்ப்பு குறைவு. மேலும், பிரமாண்டத்தில் தான் சங்கர் தேறி வருகிறார். மிச்சகாசை வைத்து நாம் எதிர்பார்க்கும் அளவிற்குப் பிரமாண்டம் எடுக்க முடியாது என்பது நாம் அறிந்ததே…

சரி, ஷங்கர் – ரஜினி கூட்டு பற்றி….

பாபா படத்த்தில் ரஜினி நடக்கும் போது தீப்பொறி பறத்தல்,,, உதறி எறியும் பாதுகை எதிரியைத் தாக்கிய பின் மீண்டும் காலில் வந்து சேருதல் போன்றவை, தனிப்பட்ட நட்பின் ( ! ) அடிப்படையில் சங்கரால் பண்ணித் தரப்பட்டது.

சமீபகாலமாக ரஜினி இது மாதிரி உதவிகளை எடுத்துக் கொள்கிறார்.

கில்லி படத்தின் இயக்குனர், ‘சந்திரமுகி ‘ படத்தின் ஒரு பாடலை முழுதும் இசைகோர்வை செய்து கொடுத்துள்ளார்.

இப்படி சங்கர் கைவண்ணம் பட்ட பாபா காட்சி என்னா ஆனாது என்பது அனைவரும் தெரிந்ததே…

‘சிவாஜி ‘ படம் பொறுத்தவரை காற்றுள்ள போதே தூற்றும் கதைதானே தவிர ஒரு நல்ல படைப்பை நாம் எதிர் பார்க்க முடியாது.

அதுவும் இருவரும் உச்சத்தில் இருந்த காலம் விட்டு காலம் போன கால கூட்டணி தான் இது.

சரி, ரஜினி மற்றும் பிற உச்ச இயக்குனர்கள் அவர்தம் இறக்கத்தில் இருந்த போது வந்த கூட்டு பற்றி சில பார்ப்போம்…

ரஜினி – J.மகேந்திரன்: ‘கை கொடுக்கும் கை ‘ >>> கைவிட்டது அனைவரையும்.

ரஜினி – பாரதிராஜா. ‘கொடி பறக்கிறது ‘ >>> அரைக்கம்பத்தில் தான் பறந்தது.

ரஜினி – மணிரத்னம் ‘தளபதி ‘ >>> ரசிகர்களுக்கு தலைவலி.

இந்த வரலாற்றில் ரஜினி – ஷங்கர் கூட்டணி சேரத்தான் வாய்ப்பு அதிகம்.

ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்.

படத்தின் அதிக விலை உங்கள் கூட்டணிக்கு நிறைய வரவேற்பு இருக்கும் என்ற விநியோகஸ்தர்களின் கணிப்பு. அதே சமயம் தொழில் தர்மம் என்று ஒன்று இருக்கிறது. தயவு செய்து அதைக் கடைபிடியுங்கள். கொஞ்சமாவது படத்திற்கு ( ie for the product ) பணம் செலவழிக்கும் வகையில் உங்கள் TAKE HOME SALARY-ஐ மறு பரிசீலனை செய்யுங்கள்.

இல்லாவிடில் ‘அந்நியன் ‘ மாதிரி விநியோகஸ்தர்கள் தலையில் துண்டு தான்…

ஆன்மீகத்தை உங்கள் தொழிலில் இருந்து ஆரம்பியுங்கள்.

பி.கு:

1. சிவாஜி – படம் பூஜை நடக்கப்போகும் அதே நாளில் தான், SEP 14 மற்றொரு பரபரப்பு பட பூஜையும்… இருக்கப்போவதாக கோலிவுட்டில் பேச்சு… அது

விஜயகாந்த் – செல்வமணி கூட்டணிப் படம்.

அது சரி, டைட்டில் எதுவாக இருக்கும்…. ? who knows.. ? may be ‘எம்.ஜி.ஆர் ‘…. ?

vinod_29_2004@yahoo.com

Series Navigation

வினோத்

வினோத்