யாரிடமாவது….

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

மதியழகன் சுப்பையா


மற்றவர் பற்றி
மணிக் கணக்கில்
பேசுகிறாய்
விசாரிக்கிறாய்

பிடித்தவைகளை
கேட்காமலேயே
சொல்கிறாய்

ஆடம்பர வாழ்வு பற்றி
எதிர்கால தேவை பற்றி
இப்படி என்னென்னமோ..

அவ்வப்போது
‘கேக்றீங்களா ? ‘ என்று
உற்றுப் பார்க்கிறாய்.

எவர் பற்றியும்
பேசாத என்னிடம்
எல்லோரைப் பற்றியும்
எக்கச்சக்கமாய்
….
….
எரிச்சலூட்டுகிறாய்

என்னைப் பற்றி
யாரிடமாவது
என்றைக்காவது
எப்பொழுதாவது ?

மதியழகன் சுப்பையா
மும்பை
madhiyalagan@rediffmail.com

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா