This entry is in the series 20060825_Issue

நாகூர் ரூமி


ஆர்வமாக அள்ள அள்ள
வழிந்து ஊற்றியது
வெள்ளை நிலா
விரல் வழியாக.

நிலவின் ஒளியில்
தெரிந்த வழியும்
விரிந்த மலரும்
அலைந்த நீரும்
குளிர்ச்சியும் கிளர்ச்சியும்
ஏரியில் கிடந்த
பொய் நிலா
காட்டிய மெய்கள்.

மெய் காட்டும் பொய்
மெய் காட்டா மெய்
எது வேண்டும் என்று
என்னைக் கேட்டால்
நான் சொல்வேன்:

நிலவு இருக்கட்டும் வானத்திலேயே
ஏரித்தண்ணீர் போதுமெனக்கு.

——————————————————
ruminagore@gmail.com

Series Navigation