மூலிகை மருந்துக்களுக்கான உலகளாவிய தேவை இந்த மூலிகைச் செடிகளை அழிக்கக் காரணமாகிறது.

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue


இயற்கைச் சூழ்நிலைகளில் இருக்கும் மூலிகைகளுக்கான உலகளாவியத் தேவை, இந்த இயற்கைச் சூழ்நிலைகளையும், காடுகளில் தானே வளரும் மூலிகைச் செடிகளில் ஐந்தில் ஒரு பகுதி பூண்டோடு அழியவும் காரணமாகிறது என்று முன்னணி அறிவியல் பத்திரிக்கை சென்ற புதன்கிழமை தெரிவித்தது,

http://www.redlist.org/

என்ற முகவரியில் அழிவை நோக்கியிருக்கும் தாவர இனங்களைக் காணலாம்.

உலக வனவிலங்குகள் பாதுகாப்பு அமைப்பு (wwf) கூற்றின்படி, சுமார் 4000த்திலிருந்து 10000 வகை தாவர இனங்கள் அழிவை நோக்கி உள்ளன.

‘இது மிகவும் தீவிரமான பிரச்னை ‘ என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆலன் ஹாமில்டன் நியூ ஸயண்டிஸ்ட் பத்திரிக்கைக்கு தெரிவித்தார்.

ஆராய்ச்சியின்படி, இந்த மூலிகை மருந்துக்கான தேவை 10 சதவீதம் ஒவ்வொரு வருடமுமாக கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளது. இது வடக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மட்டுமே, சுமார் 11 பில்லியன் பவுண்டுகள் சந்தை மதிப்புள்ளது.

50000 மருத்துவ மூலிகைச் செடிகள் இவ்வாறு மருந்து தயாரிக்க பயன்படுகின்றன. இவ்வாறு பயன்படும் மருந்துச் செடிகளில் மூன்றில் இரண்டு பங்கு காட்டில் மட்டும் விளையும் தாவர வகைகள்.

இவ்வாறு அழிவை நோக்கி இருக்கும் தாவரங்களில் டேட்டு லாக்கா tetu lakha, என்ற தென் இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படும் மரம் கான்ஸருக்கு எதிரான மருந்துகளுக்காக ஐரோப்பாவில் பயன்படுத்தப்படுகிறது. saw-wort எனப்படும் இந்திய வேர் தோல் வியாதிகளைக் குணப்படுத்தவும், endrilled fritillary என்ற சீன தாவரம் மூச்சுக்குழாய் பிரச்னைகளை தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.

தேவை அதிகரிப்பதாலும், இந்த தாவரங்களை சந்தை மற்றும் தொழில் மயமாக்குவதாலும், இந்த தாவரங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக ஆகியிருக்கிறது. இந்த தாவரங்கள் பல நூற்றாண்டுகளாக மனித குலத்துக்கு பயன்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் இவைகளின் எதிர்காலமோ கேள்விக்குறி என்று மார்ட்டின் ஹார்பர் கூறுகிறார்.

மூலிகை மருந்து தயாரிக்கும் ஐரோப்பிய நிறுவனங்கள் இந்த தாவரங்கள் நீண்டகாலம் நம்முடன் இருக்க வேண்டிய தேவையை உணராது லாபம் சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளதால் இந்த நிலை என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த தொழில்துறை, சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் மற்றும் அமைப்புகளோடு இணைந்து இந்த தாவரங்களின அறுவடை இந்த தாவரங்களின் எதிர்காலத்தைப் பாதிக்காதவாறு ஊர்ஜிதம் செய்யவேண்டும் என்று ஹார்ப்பர் கூறினார்.

——————

Series Navigation

செய்தி

செய்தி