மூன்றாம் பக்கம் ( 3)

This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

வானரன்


நெறியாள்கை

மாதுார் பண்டகார் (Madhur Bhandarkar)

‘Trishakti ‘ (1999), ‘Chandni Bar ‘ Satta ‘

நடிகர்கள்

Konkana Sen …. Madhavi

Sandhya Mridul Pearl

Atul Kulkarni Vinayak Mane

Boman Irani …. Deepak Suri

Tara Sharma …. Gayatri;

வித்தியாசமானதலைப்பு, சுவையானதும் கூட. தமிழில் இவ்வாறான கருவைக்கொண்ட படங்கள் வருவது குறைவு.

மூன்றாம் பக்கம் – பத்திரிகையின் மூன்றாவது பக்கம், இதில் வரும் செய்திகள் – பிரபலங்களின் செய்திகள், கிசு கிசு க்கள், கவர்ச்சிப்படங்கள், விருந்து விபரங்கள் போன்றவை. பெங்களுரில் இருந்து மும்பாய் வரும் மாதவி சர்மா இப்பத்திகையின் மூன்றாம் பக்கத்தை நிரப்புகின்றார். விருந்துகளுக்கு செல்வது, பேட்டி எடுப்பது என செலவிடுகிறார், தனது நாட்களை.

இவரது அறையில் மூன்று தோழிகள் (இவருடன் சேர்த்து) பேர்ல் – இவர் விமானப் பணிப்பெண். கோடாஸ்வரரை திருமணம் செய்யவேண்டும் என்பது இவரது ஆசை. மற்றவர் காயத்தரி ஒரு வெற்றிகரமான நடிகையாக வேண்டும் என்பது இவரது கனவு. காயத்தரிக்கும், பிரபல நடிகருக்கும் உறவு ஏற்படுகிறது. பின்னர் பிரபல நடிகரால் ஏமாற்றப்படுகிறாள். மாதவியும் புயல அயமநரி யசவளைவ ரேகானும் நண்பர்கள். ரேகான் புயுலு என தெரிந்தவுடன் வெறுக்கின்றாள். இவை உதிரி சம்பவங்கள்.

தீபக் சூரி பலமுள்ள பத்திரகை ஆசிரியர். வினயக் அப்பத்திரிகையில் நடப்பு சம்பவங்கள், விசாரணைகள், அதன் பின்னணிகள் என எழுதுபவர்.

ருமேஸ் தர்பார் பிரபல தொழில் அதிபர். அவரது மனைவி அஞ்சலி அனாதை குழந்தைகளுக்கான ஆச்சிரமத்தை நடத்திவருகின்றார்.

அஞ்சலி தீடாரென தற்கொலை செய்து கொள்கின்றார். மரண சடங்குகளில் மாதவி கலந்து கொள்ளகிறார். அங்கு அனைவரும் அடுத்த விருந்து என்ன ? எப்போது ? யார் ? யார் ? கலந்து கொள்கிறார்கள் ? என கதைப்பதைக் கேட்டு மனம் வெறுக்கிறான்றாள். பத்திரிகை ஆசிரியரிடம் தன்னை நடப்பு சம்பவங்களுக்கான நிருபராக மாற்றுமாறு கேட்கின்றாள். வினயக்கின் உதவியாளராக பயிற்சி பெறுகின்றாள் மாதவி.

ஓரு நாள், வினயக் வேறு விடயத்துக்காக நகரில் இல்லாதபோது, இவர்களுக்கு தகவல் தருபவர் குழந்தை கள் கடத்தல் பற்றிய விபரங்களை மாதவியிடம் கூறுகின்றார்.

மாதவியும் நகர் காவல் அதிபரும் அங்கு சென்ற பொழுது பல பிரபலங்கள் சம்பந்தப்பட்டுள்ளதை கண்டு பிடிக்கின்றனர். எவரையும் கைது செய்ய முடியாமல் மேலிடம் தடுத்து விடுகிறது.

அன்றிரவே தனது கட்டுரையை ஆசிரியரிடம் கையளிக்கின்றாள். ஆசிரியர் பத்திகை அதிபரிடம் சென்று அனுமதி கேட்கின்றார். இக்கட்டுரையின் அவசியம் பற்றியும் தெரிவிக்கின்றார்.

அவரது பதில் – இதில் சம்பந்தப்பட்டுள்ள ருமேஸ் தர்பார் எங்களது பத்திரிகையின் பெரும் பங்கு விளம்பரதாரர். எனவே மாதவியை வேலையை விட்டு வெளியேற்று. கட்டுரையை பிரசுரிக்காதே.

நகர் திரும்பும் வினயக், மாதவியிடம் சில உண்மைகளை கூறுகின்றார். அஞுசலியின் தற்கொலைக்கு காரணம் – ருமேஸ் தர்பார் அஞ்சலியின் ஆசிரம்த்து குழந்தைகளுடன் உறவு கொள்கிறார். இது அஞ்சலிக்கு தெரிந்து விடுகிறது.

ஓரு பொழுதும் கட்டுரையுடன் முழு தடயங்களையும்; கொடுக்கக்கூடாது. அதுவே உனக்கு எதிராக திரும்பிவிடும். அத்துடன் வினயக் கூறும் முக்கியவிடயம் “ We have to be in the system, to change the system.” என்பது.

மாதவி இப்பொழுது வேறு ஒரு பத்திரிகையில் மூன்றாம் பக்கத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றார், நம்பிக்கையுடன். ர்

ஃ மாதுார், சாந்தினி பாரிலும் செக்ஸை மூலதனமாக பாவித்துள்ளார். இதிலும் அதே நிலை தான். இது ஒரு வியாபார தந்திரமே. செக்ஸ் சம்பந்தப்பட்ட சமூகப்பிரச்சினைகளை கருவாகக் கொள்வதால் இது இலகாகிறது.

ஃ பல பிரச்சினைகளை கூற முற்படும் பொழுது, பிரச்சினைகள் பற்றிய தெளிவான பிரக்ஜை இருந்தும் எதுவும் ஆழமாக கூறமுடியாமல் போயுள்ளது. குழந்தைகள் மீது பாலியல் வன்முறை, வர்த்தகமயமாதலும் பத்திரிகையியலும், மேல்தர வர்க்கத்து வண் உணர்வுகள் என ஆழமான பிரச்சனைகள் இருந்தும், வானம் இருண்டு,மழை துாறியது போல் உள்ளது.

ஃ பாத்திரங்களின் புறவுணர்வுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், அகத்தின் ஆழத்துக்கு செல்லமுடியவில்லை. இது ஒரு இடை நிலை சினிமா என்ற நிலையிலிருந்து, சமரச சினிமா என்ற நிலைக்கு தள்ளிவிட்டது.

ஃ கொன்கனா சென், அதுல் குல்கர்னி, பொமன் இரானி ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர்.

ஃ மூன்றாம் பக்கத்துாடாக இந்த சமூகத்தைப்பார்த்து சிரிக்க வைக்கும் இயக்குனர், மேல்தர வர்க்கத்து வண் உணர்வுகள் மீது கவலை கொள்ள செய்வதுடன், கவனமும், அவதானமும் தேவை என எச்சரிக்கவும் செய்கிறார்.

அலைகள்

கடந்த சில வாரங்களாக எனது நண்பர் ஒருவர் இயக்குனர் சிறீதாின் ~அலைகள்| படம் ஏன் பயங்கர தோல்வியடைந்தது என கேட்டு நச்சரித்து கொண்டிருந்தார். தேடிப்பிடித்து ஜெயா அன்ட் பிறதர்ஸில் மீண்டும் ஒரு தடவை பார்த்தேன்.

வழமையான மசாலக் காட்சிகளுடன், சிறீதர் கூறமுட்பட்ட நல்ல விடயம், வன்புணர்வுக்குட்பட்ட யுவதியை ஒருவர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அதனை ஒருவரும் அன்று ஏற்றுக் கொள்ளவில்லை. அது அன்று.

சில வாரங்களுக்கு முன் ஒருவர், தனது மனைவியின் பாடசாலை காதலை தெரிந்து கொண்டவுடன், மனைவியை வீட்டை விட்டே துரத்தி விடுகிறார். இது இன்று.

அன்றைய மனோநிலையும், இன்றைய மனோநிலையும் ஒன்றே.

~ஆட்டோகிராப்~ எல்லாம் ஆண்களுக்கே.

வானரன்

—-

Nmahesu@aol.com

Series Navigation