மும்பை விசிட்-சில தகவல்கள்

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

உஷாதீபன்


சமீபத்தில் மும்பை சென்று வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. முதன் முறையாக. மும்பையைப் பார்த்தபின், சென்னை ஒன்றுமே இல்லை என்று தோன்றியது. எவ்வளவு பெரிய நகரம் என்று பிரமிக்க வைத்தது. இரு சக்கர வாகனங்களே அதிகம் தென்படவில்லை. எல்லோரும் கார் வைத்திருக்கிறார்கள்
என்று உணர வேண்டியிருக்கிறது. அங்கு பழைய ஃபியட் கார்கள் அனைத்தும் டாக்சிகளாக ஓடுகின்றன.
கருப்புப் பெயின்ட் அடித்து, மேற்புறத்தில் மஞ்சள் வண்ணம் ப+சி.
பத்து கி.மீ. பதினைந்து கி.மீ. பயணம் செய்து இறங்கும்போது “பன்னெண்டு ரூபா கொடுங்க சார்…”
“பத்து ரூபா கொடுங்க சார்…ஃ” என்கிறார்கள். நான் அதிசயித்துப் போனேன். நம்மூரில் என்றால் எழுபது,
எண்பது என்று பிடுங்கி விடுவார்களே என்று. அத்தனையும் சிலிண்டர் காஸி;ல் ஓடுகிறதாம். ஒரு கி.மீ. க்கு
அவர்களுக்குக் குறைந்தது முப்பது அல்லது நாற்பது பைசாக்கள்தான் ஆகுமாம். ஓட்டுநர்களுக்கும் செலவு
குறைவு. நமக்கும் லாபம். இது அதிசயிக்கத்தக்க விஷயம்தானே?
அங்கு பெரும்பாலான இடங்களில் வீட்டில் பைப் காஸ் சப்ளை வந்துவிட்டது. என் சகோதரியின்
வீட்டில் அந்த வசதி இருந்தது கண்டு எனக்கு ஒரே ஆச்சரியம். முதலில் அது மோட்டார் சுவிட்சோ என்று
நினைத்துப் போடப் போனேன். அருகில் சென்று நிதானித்த போதுதான் தெரிந்தது அது மீட்டர் பாக்ஸ்
என்று. மின்சாரம் ய+னிட் ஆகிறதல்லவா, அதுபோல இதற்கும் அவ்வப்போது பணம் கட்டிவிட
வேண்டியதுதான்.
மும்பை பயணிக்கும்போது ஆந்திரா பார்டர் தாண்டும் இடத்திலிருந்து அவஸ்தைதான். ஜனங்கள்
திபு திபுவென்று வந்து ரிசர்வேஷன் கோச்சில் சர்வ சாதாரணமாக ஏறிக்கொள்கிறார்கள். வழியெங்கும்
படுத்துக்கொள்கிறார்கள். பாத்ரூம் போவது என்றால்கூட இவர்களைத் தாண்டித்தாண்டித்தான் போயாக
வேண்டும். அங்கும் வரிசை. இஷ்டத்துக்கு அசிங்கம் பண்ணி வைக்கிறார்கள். சகிக்க முடியாது
மனிதனால்.
விசாரித்தபோது போதுமான பஸ் வசதி எங்களுக்கு இல்லை என்றார்கள். அலுவலகம் செல்பவர்கள்
கூட்டம் காலை எட்டிலிருந்து ஆரம்பித்து விடுகிறது. அவர்கள் பாட்டுக்கு வந்து உட்கார்ந்துகொண்டு,
வெளியே அமைதியாக வேடிக்கை பார்த்தவாறே இருந்து, சொல்லாமல் கொள்ளாமல் இறங்கிச் சென்று
விடுகிறார்கள். பேசினால்தானே வம்பு என்று நினைக்கிறார்கள் போலும்! போக்குவரத்து வசதி, நம்
தமிழ்நாட்டில் எவ்வளவோ பரவாயில்லை. பிற இடங்கள் போய்ப் பார்த்தால்தான் இந்த அருமை தெரியும்.
நம் தமிழ்நாட்டு ரயிலில், ரிசர்வேஷன் கோச்சில் வந்து உட்கார பயப்படுவார்கள். தப்பித் தவறி வந்து
விட்டாலும், ரொம்பவும் பரிந்து கேட்டு உட்கார்ந்து கொள்வார்கள். சங்கடத்துடனேயே பயணம்
செய்வார்கள். இது கண்டுகொண்டிருக்கும் உண்மை. ஆனால் இந்த நாகரீகம் ;துளிக் கூட ஆந்திர எல்கை
தாண்டிய பயணத்தில் தென்படவில்லை.
மும்பை செல்வதாக இருந்தால், கோடை காலத்தில் பயணம் செய்யும் வேளை வந்தால்
தயவுசெய்து ஏ.சி.யில் போய் விடுங்கள். காசு போனாலும் பரவாயில்லை. இல்லையென்றால் வெந்து
தணிந்துவிடும் உடம்பு. “இது மும்பை எக்ஸ்பிரஸ்” இல்லை. “அனல் எக்ஸ்பிரஸ்” என்று கூட நான் என்
சகோதரர்களிடம் சொன்னேன். திரும்பத் திரும்பச் சொன்ன போது அந்தப் பெயர் கூட நன்றாக
இருப்பதாகத் தோன்றியது.
வண்டியில் இன்னொரு சங்கடம். அரவாணிகள் வர ஆரம்பித்து விடுகிறார்கள். கைகளைத்
தட்டிக்கொண்டே, பாட்டுப் பாடிக் கொண்டு, அசிங்கமான அசைவுகளை வெளிப்படுத்திக்கொண்டு, வந்து
பிச்சை கேட்கிறார்கள். யாராவது ஒருவர் கொடுத்தால் அத்தோடு நகர மாட்டேனென்கிறார்கள்.
ஒவ்வொருவராகப் பிடுங்குகிறார்கள். தர மறுத்தால் அருகில் வந்து திறந்து காண்பித்து தொந்தரவு
செய்கிறார்கள். இது கண்ட உண்மை.
…2…
– 2 –
அரவாணிகளுக்கு அரசு வாரியம் ஏற்படுத்த அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அவர்களையும்
சமூகத்தில் நன்மதிப்போடு நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில். ஆனால் அவர்களின் நடவடிக்கை
பலரிடம் இப்படியிருப்பதைப் பார்த்தால் நமக்கு மனம் வேதனையுறும் என்பது உண்மை.
மும்பையில் அரவாணிகள் பெரிதும் மதிக்கப்படுகிறார்கள். புதிய வியாபார ஸ்தலங்களை
அவர்கள்தான் ரிப்பன் வெட்டித் திறந்து வைக்கிறார்கள். மகாபாரதத்தில் முதல் நாள் அரவான் பலி
போல. யார் வீட்டிலாவது குழந்தை பிறந்தால் அங்கு அரவாணிகள் கூடி விடுகிறார்கள். அவர்களுக்குப்
பணம் கொடுக்கப்படுகிறது அங்கே. வெறும் ஐம்பது நூறெல்லாம் இல்லை. ஆயிரம் இரண்டாயிரம் என்று
எடுத்து வைக்க வேண்டும். இது அங்கே நடைமுறையாக உள்ளது. சேட்டுகள் கொடுக்கவும்
செய்கிறார்கள். இருக்கு, கொடுக்கிறாங்க, என்று நினைத்துக் கொண்டேன் நான்.
பல இடங்களில் தமிழர்கள் நிறைய இருக்கிறார்கள். நான் சென்றிருந்த பகுதி கோரேகான் என்னும்
இடம். தாதரில் இறங்கிச் செல்ல வேண்டும். அங்கேயுள்ள கோயில்களில் நம் தமிழ்நாட்டுப் புரோகிதர்கள்
பலர் இருக்கிறார்கள். காலனி பாதுகாக்கும் ஒருவர் கூட நம்மவர்தான். திருவெல்வேலி, தென்காசி,
ராஜபாளையம் என்றார்கள். வீரவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் இருந்தார். பத்துப் பதினைந்து
வருடத்திற்கு முன்பே வந்தாயிற்று என்று பதில் வந்தது.
நம்மூரில் கோயிலில் விக்ரகங்களாகப் பார்த்துவிட்டு, அங்கு சாமியைப் பார்க்கும்போது ஏனோ
மனதி;ல் பக்தி தோன்றவில்லை எனக்கு. எல்லாம் பொம்மைகளாக இருந்தால்? நவராத்திரிக்கு பொம்மைகள்
வைப்பார்களே, அது போல. கோயிலில் பிரசாதமாக சின்னச் சின்ன உருண்டைகளாக மிட்டாய்கள்
கொடுக்கிறார்கள். ஒரே ஒரு துளசியைக் கணக்காக எடுத்துக் கையில் உதிர்க்கிறார்கள். தீர்த்தம்
தருவதுபோல், நெய்போன்ற ஒன்றைத் துளி உள்ளங்கையில் ஊற்றுகிறார்கள். அதை வாயில்
விட்டுக்கொண்டு (விழுந்ததா என்று உறுதி செய்ய வேண்டும்!) மீதியைத் தலையில் தேய்ப்பதா, என்ன
செய்வது என்று சந்தேகம் வருகிறது. பிசு பிசுவென்று ஆகிப் போகுமே! நான் அருகில் இருந்த குழாயில்
சுத்தமாகக் கழுவிவிட்டேன் எதற்கு இந்தப் பாடு என்று. நம்மூர்க் கோயில்களில் ஒரு எண்ணெய்ப் பிசுக்கு
நாற்றம் மனதுக்கு உவப்பாக வந்து கொண்டேயிருக்கும். அல்லது வெளவால் முடை நாற்றம். அங்கும்
இதே போல் ஒரு வாடை உள்ளதுதான். அந்த வாடை ஏனோ மனதுக்குப் பிடிக்கவில்லை எனக்கு.
சாதாரண மக்கள் தெளிவாக உடையணிவதாகத் தெரியவில்லை. ஏதோ காய்ரே ப+ய்ரே என்று
தொங்கவிட்டுக்கொண்டு அலைவதுபோல் தோன்றியது.
தண்ணீர் என்றதும் ஒன்றை இங்கே சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது. மும்பையைச் சுற்றி
ஏழு எட்டு ஏரிகள் இருக்கின்றனவாம். வருடத்தில் ஒரு முறை அவை நிரம்பி விட்டாலே மும்பை
முழுவதற்கும் வருடம் ப+ராவும் தடையின்றி ஜனங்களுக்குத் தண்ணீர் கிடைத்துவிடும் என்றார்கள். எங்கு
பார்த்தாலும் அடுக்குமாடி வீடுகளாகக் கட்டித் தள்ளிக்கொண்டிருக்கிறார்களே தண்ணீருக்கு என்ன
பண்ணுவார்கள்? என்று கேட்டபோது இந்தப் பதில் வந்தது. பன்னெண்டு மாடி, பதினைந்து மாடி என்று
மேலேயிருந்து பார்த்தால் தலை சுற்றிக் கீழே விழ வேண்டியதுதான். அவ்வளவு வானுயர்ந்த உயரம்.
அத்தனையும் கான்க்ரீட் காடுகள். அவை கட்டப்பட்டதுபோல இல்லை. ஏதோ ப+மியிலிருந்து தானே எழும்பி
நிற்பதுபோல் தோன்றின.
கார் ஓட்டிக் கொண்டு போனவர் ஒரு திருநெல்வேலிக்காரர். இதா, இந்தப் பக்“ கம் போனாக்க நம்ம
ஸ்ரீதேவி வீடாக்கும்…” என்று கையைக் காண்பித்தார். “ஏய்…ஏய்…ஸ்டியரிங்கைப் பிடியப்பா…” என்றேன் நான்.
“இதா அமிதாப் வீடு…” என்று சாலையோர பஙக் ளா ஒன்றைக் காண்பித்தார். வெளியிலிருந்து பார்தத் hல்
ஒன்றும் தெரியாது. பத்துப் போலீஸ்காரர்கள் காவலுக்கு உட்கார்ந்திருந்தார்கள் அங்கே. சமீபத்தில்
ராஜ்தாக்கரே ஆட்கள் கல்லெறி விட்டதுதான் காரணம் என்றார் ஓட்டுநர்.
எங்கு பார்த்தாலும் கூட்டம். கொத்துக் கொத்தாக ஆட்கள். ஆனாலும் மும்பையில் ஒரு அழகு
இருப்பதாகவே தோன்றுகிறது மனதுக்கு.
நான் கலந்து கொண்ட ஒரு திருமணத்தில் நம் தமிழ்நாட்டுக்காரர்கள்தான் சமையல். இங்கிருந்து
சென்று அங்கு கொடி நாட்டியவர்கள். அந்த ஊருக்குத் தகுந்தமாதிரி நம் சமையலை அவ்வளவு ருசியாக,
நாகரீகமாக சமைத்துப் படைத்திருந்தார்கள். அதுவும் ரிசப்ஷன் அன்றைக்கு பெரிய திறந்த வெளி உணவு
விடுதிக்குள் நுழைந்துவிட்டது போன்ற ஒரு உணர்வுதான். அத்தனை விதத்திலான உணவு வகைகள்.
ஷெர்வாணி அணிந்து கொண்டு மாப்பிள்ளையும், வலது புறம் போட்ட முந்தியோடு பெண்ணும் பளீர் என்று
நின்ற காட்சியும் பலர் வாஜ்பாய் போன்று உடை அணிந்து வந்திருந்த காட்சியும் என்னை. ..3..
– 3 –
ரொம்பவும் ஈர்த்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வாரம் இருங்கள் எல்லாம்சுற்றி
முடித்துவிட்டுப் போகலாம் என்று சொன்னார்கள். இருந்த நாலு நாளில் ரெண்டு நாள் திருமணத்தில்
போய்விட்டது. ரெண்டு நாள் சுற்றிப் பார்த்ததுதான். வரவே மனசில்லை எனக்கு. ஆபீஸ் இழுக்கிறதே?
என்ன செய்வது? ரொம்பவும் லீவு போட முடியாதே? ரிசர்வ் பண்ணியதைக் கான்சல் செய்தால் நிறைய
நஷ்டமாகுமே? திரும்பவும் உடனே டிக்கட் கிடைக்காதே? எப்படித் திரும்புவது? இப்படியான யோசனையில்,
இல்ல இருக்கட்டும், இன்னொரு சந்தர்ப்பத்துல பார்த்துக்கலாம்… என்“ ” று அரை மனதோடு சொல்லி
விட்டுக் கிளம்பி விட்டேன்.
இன்னும் சொல்ல நிறைய இருக்கத்தான் செய்கிறது. போதும். நன்றி!
அன்பன்,
உஷாதீபன்

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்