This entry is in the series 20011222_Issue


முட்டை –5

புளி –50கிராம்

சிறிய வெங்காயம் –5

பச்சை மிளகாய் –3

பேரீச்சம்பழம் –3

வெல்லத்தூள் –1டாஸ்பூன்

மாங்காய்பவுடர் –2டாஸ்பூன்

தனியாத்தூள் –1டாஸ்பூன்

கரம்மசாலாத்தூள் –1/2டாஸ்பூன்

காரத்தூள் –1டாஸ்பூன்

கொத்துமல்லித் தழை –தேவையான அளவு

புளியை ஊறவைத்து கெட்டியாக அரைத்து, சக்கையை தூர எறிந்துவிடவும்.

முட்டைகளை வேகவைத்து ஓடு நீக்கிக் கொள்ளவும். ஊசி முனையால் முட்டைகளை ஆங்காங்கே கீறி விடவும்.

சிறிய வெங்காயம், பச்சைமிளகாய், பேரீச்சம்பழம், வெல்லத்தூள் இவைகளை மைய அரைத்து புளிக்கரைசலில் உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். இவற்றுடன் மாங்காய் பவுடர், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள், காரத்தூள் கலந்து கொள்ளவும்.

பாத்திரத்தில் மசாலாவை ஊற்றிக் கொதிக்கவிடவும். கொதிக்கையில் முட்டைகளை சேர்க்கவும். பத்து நிமிடம் கழித்து கொத்துமல்லித் தழை தூவி இறக்கிவிடவும்.

Series Navigation