மனப் பால்வெளியில்
கே ஆர் மணி
நம்பிக்கை எரிநட்சத்திரங்கள்
தூரமாய் இருப்பதால் என்னவோ
பெரியதாய் தெரியாமல்..
பயக்கோள உருண்டைகள்
நியதியாய் தன்னையும்
பிரபஞ்சத்தையும் சுற்றிக்கொண்டே..
வாழ்தலின் போரட்டம் சூரியனாய்
காய்ச்சும் காமம் சந்திரனாய்
உணர்ச்சி, உணர்வுகளின்
போரட்டக் கசடுகள் எரிகற்களாய்
அனைத்தையும் இழுத்து சேர்க்கும்
போர்வைத் தோலாய்
வெறுமை வியாபிக்கும் என்
மனப் பிரபஞ்சம் முழுவதும்..
ஏதோ ஒன்று எப்போதும்
குறைவாகவே என்
முற்றுப்பெறாத கவிதை போலவே..
mani@techopt.com