மந்த்ரம்

This entry is part [part not set] of 11 in the series 20001008_Issue

பசுவய்யா


ட்யூப்லைட் சுந்தராச்சி உபயம்
குத்துவிளக்கு கோமுட்டிச்செட்டி உபயம்
உண்டியல்பெட்டி தெ.கு.வே உபயம்
பஞ்சதிரி விளக்கு ஆண்டி நாடார் உபயம்
குண்டுச்சட்டி பால்பாயாச உருளி த்ரிவிக்ரமன் நாயர் உபயம்
சூடன் தட்டு ரீஜென்று மகாராணி உபயம்
தகரடப்பா ஆறு நித்யானந்தா உபயம்
அலுமினியப் போணி வமு.ச.ல.பெ.ம
அரிகரபுத்திரன் செட்டியார் உபயம்
ஸ்குரு ஆணி நட்டு பட்டு அம்மாள் உபயம்
தீபத்தட்டு பெரியன் தாத்தாச்சாரி உபயம்
சின்னத்தட்டு ஒரு டஜன்
வைரங்குளம் மிட்டாதார் உபயம்

வைரங்குளம் மிட்டாதார்
அவர் அப்பா உபயம்

அவர் அப்பா
அவர் அப்பா உபயம்

அவர் அப்பா
அவர் அம்மா உபயம்

அவர் அம்மா
அவர் அப்பா உபயம்

அவர் அப்பா
அவர் அம்மா
அவர் அம்மா
அவர் அப்பா

நீ
நான்
அவள்
இவன்
அவன்
பூனை
புண்
பூ
புழு
பூச்சி
குண்டூசி
குத்தூசி
கடப்பாரை
லொட்டு
லொடக்கு
எல்லாம்
ஸ்வாமி
உபயம்

ஸ்வாமி
சிற்பி
உபயம்

சிற்பி
அவர் அப்பா உபயம்

அவர் அப்பா
அவர் அப்பா உபயம்

அவர் அப்பா
அவர் அம்மா உபயம்

அவர் அப்பா அவர் அம்மா
அவர் அம்மா அவர் அப்பா
எல்லோரும் ஸ்வாமி உபயம்

ஸ்வாமி
நம்ம உபயம்
நாம
ஸ்வாமி உபயம்
நம்ம பேரு சாமிமேலே
சாமி பேரு நம்மமேலே

**
இலக்கியவட்டம் செப்டெம்பர் 1964
**

Series Navigation

பசுவய்யா

பசுவய்யா