மணிவிழா

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

ரஜித்


மனிதர்களுக்குத்தான்
மணிவிழாக்கள்

மனிதர்களுக்காய் வாழும்
மாடு மரங்களுக் கில்லை
மணிவிழாக்கள்

இயற்கையை
அண்டி மட்டுமே மாடு மரங்கள்
அண்டியும் தாண்டியும் மனிதர்கள்

தாண்டியதால்தான் இன்று….

சகதி நீச்சல்கள்
சக்தி விரயங்கள்

மல்லாந்து துப்பும் மதங்கள்
மலர்களைத் தூற்றும் மதியினர்

கந்தகர் கலந்த காற்றுக்கள்
வெந்துபோன காதல்கள்

காலன்களாய் வாகனங்கள்
கலப்பட தானியங்கள்

ஆக்ஸிஜன் முட்டும் சொற்கள்
ஆலம் கக்கும் பற்கள்

மனைவி மக்கள் நூல்களில்
மண்டை குடையும் சிக்கல்கள்

தாக்கியும்
தாங்கியும் இதயங்கள்

மாடு மரங்களுக்கேது
இத்தனை வலிகள்

நியாயம்தான்
இத்தனையும் தாங்கும்
மனிதனுக்குத்தான் தேவை
மணிவிழாக்கள்


rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation

ரஜித்

ரஜித்