மக்கள் மேம்பாடு !

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

கோவி.கண்ணன்


ஆண்டுக்கு நூறுநாள் வேலை,
பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு !

பயணிகள் விமானம் இந்தியா தயாரிக்கிறது,
குடியரசு தலைவர் அப்துல்கலாம் அறிவிப்பு !

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா அமைத்திட
கருணாநிதி வேண்டுகோள் !

மக்கள் நலத்திட்டங்கள், தேசியகொடி
ஏற்றி வைத்து ஜெயலலிதா அறிவிப்பு !

இது எல்லாம் என்ன செய்தி ?

சூப்பர் ஸ்டாரின் அடுத்தபடம் ‘சிவாஜி ‘ !
இதுதான் செய்தி !

பட்ஜெட் நூறுகோடியாம் !
ஆசியாவிலேயே இரண்டாவது
அதிக சம்பளம் வாங்கும் நடிகராம் !
பூஜைக்கு முன்னே விற்று தீர்ந்து விட்டதாம் !

ஏவிஎம், சங்கர், ரஜினி கூட்டனியின்
அருமையான இந்திய மேம்பாட்டு திட்டம் !

இத்திட்டத்தினால்,
தமிழகத்தின் தண்ணீர் தாகம் நீக்கப்படும் !
அண்ணன் சொன்னதுபோல்,
கங்கை காவிரி இணைக்கப்படும் !
சுனாமியின் சோகம் மறக்கப்படும் !

பட்ஜெட்டில் துண்டு விழாமல் இருக்க
ரசிகனின் கோவணமும் அவிழ்க்கப்படும் !

அடுத்த ஆண்டு தீபாவளி திருநாளில்
இத்திட்டம் செயல்பட, இப்போதே
மூலைமுடுக்கெல்லாம் இத்திட்டம் சென்றடைய,
செய்ய வேண்டியது பத்திரிக்கை நன்பர்களின் பொறுப்பு !

கோவி.கண்ணன்
சிங்கப்பூர்

Series Navigation

கோவி.கண்ணன்

கோவி.கண்ணன்