மகா அலெக்ஸாண்டர் இந்தியப் போரில் தோல்வி அடைந்தாரா?

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

சி. ஜெயபாரதன், கனடா


சென்ற வாரக் கட்டுரையில் நண்பர் வஜ்ரா ஷங்கர் எழுதிய கடிதத்தில் இந்தியப் போர் நடந்த போது புருஷோத்தமனிடம் மகா அலெக்ஸாண்டர் தோற்றதாகச் சில மேற்கோள்களுடன் காட்டியுள்ளார். நான் கீழே குறிப்பிட்டுள்ள தகவல் நூல்களில் எதனிலும் மகா அலெக்ஸாண்டர் புருஷோத்தமனிடம் தோற்றதாக அறியப்படவில்லை.

200 யானைப் படைகளைத் திரட்டி அப்போரில் ஐயமின்றிப் புருஷேத்தமன் தீவிரமாகப் போரிட்டு கிரேக்கப் படையினருக்குப் பலத்த காயங்களையும், உயிர்ச் சேதங்களையும் உண்டாக்கினார். யானைப் படைகளின் அசுர பலத்தை கிரேக்கர் சற்றும் எதிர்பார்க்க வில்லைதான்! அப்போரில் அலெக்ஸாண்டரும் காயப்பட்டதாக அறியப் படுகிறது. ஆயினும் அணிவகுத்து வெகு விரைவில் பல திக்கும் பாய்ந்து சென்று தாக்கும் கிரேக்கரின் குதிரைப் படைகள் முன்பாக புருஷோத்தமனின் மெதுவாக நகரும் யானைப் படைகள் முடிவில் தோற்றுச் சரண் அடைந்தன. அதுவரை அத்தகைய கடும் எதிர்ப்பை எதிர்பாராத அலெக்ஸாண்டர் புருஷோத்தமனின் பராக்கிரமத்தைப் பாராட்டி வெகுமதிகள் வழங்கி, மீண்டும் அவரையே அரசனாக்கிச் சென்றதே உண்மையான வரலாறு.

தகவல்:

1. Journeys of the Great Explorers By: Rosemary Burton, Richard Cavendish, Bernard Stonehoue [2001]
2. The Discoveries, A History of Man’s Search to Know his World By: Daniel Boorstin [1985]
3. Geographical Atlas of the World [1993]
4. Atlas of World History By: Harper Collins [1998]
5. Atlas of the World By: Reader’s Digest [1992]
6. Works of Man – A History of Invention & Engineering from the Pyramids to the Space Shuttle By: Ronald Clark [1985]
7 Britannia Concise Encyclopedia [2003]
8 Aristotle -Wikipedia, Free Encyclopedia.
9 Philip & Alexander: Changes Introduced [www.csun.edu/~hcf11004/alexphil.html]
10 Atlas of World History Vol I & II [1974]
11 Encyclopedia of Britannica [1978]
12 The New Book of Knowledge [1984]
13 The Illustarted World History [1999]
14 National Geographic -Great Peoples of the Past The Greeks Map [1999]
15 A New History of India (5th Edition) By: Stanley Walpert [1997]
16 The Columbia History of the World By: John Garraty & Peter Gay [1972]
17 A History of India Vol I & II By: Romila Thapar [1990]

******************

[Jayabarat@tnt21.com (Oct 11, 2006)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts