ப்ாீத்தா

This entry is part [part not set] of 17 in the series 20010401_Issue

இரா. சுந்தரேஸ்வரன்.


1

ஏன் அங்கு வந்தேன் ? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது – இது மாதிாி தன்னையே மறந்து விடுவது அடிக்கடி நிகழ்வதுதான் – ப்ாீத்தா எனக்குத் தேநீர் கொணர்ந்தாள். அலுவலகம் தவிர மற்ற சமயங்களில் கான்டாக்ட் லென்ஸ் அணீணிவதை ப்ாீத்தா தவிர்த்து விடுவாள். தற்போது தடிமனான கண் கண்ணாடி அணீணீணிந்திருந்தாள்.

நல்ல தேநீர். ஏலக்காய் ஏதும் போடாமல், சாதாரணமான தேநீர். அதைக் குடித்து முடிப்பதற்குள் மறந்து போன விஷயம் – இந்த வருகைக்கான காரணம் – கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் மெதுவாக தேநீரை உறிஞ்சினேன். எனது எண்ணத்திற்கு மற்றும் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் தேநீரும் சூடாக இருந்தது; மேலும், அது தேநீராக இருந்தது, ஓர் ஆறுதலாக இருந்தது.

ஆனால், கையில் ஒரு கோப்பையுடன் ப்ாீத்தா என் எதிாில் வந்து அமர்ந்தவுடன், அது தடங்கலாகவே தோன்றியது. கண்ணாடிக்குப் பின் நின்ற அவளது விழிகளை சந்தித்தவுடன், எனது வாய் அனிச்சையாக ‘சமையல் எல்லாம் எப்படிப் போகிறது ? ‘ என்று கேட்டது. அவளிடம் கேட்கப் பொருத்தமில்லாத கேள்வி அது. ஆனால், நல்லவிதமாய் அவள் பதிலேதும் சொல்ல முற்படவில்லை; மெதுவாக புன்னகைத்தாள். எனது கோப்பையில் இன்னும் பாதி மிச்சமிருந்தது.

அப்போது, வெளியில் சென்றிருந்த அனிதா உள் நுழைந்தாள். அனிதா நேரே என்னிடம் வந்து எனது குடையை கையில் திணித்தாள். ஸ்பாிசம் ஏதுமில்லாமல் அந்த திணிப்பு நடந்தது. ஆனால், நேற்று முன்தினம் அவளுக்கு எனது குடையைத் தரும்போது எனது விரல்கள் அவளது விரல்களைத் தீண்டுமாறு பார்த்துக் கொண்டேன். கொடுத்தபின் குடை பற்றிய கவிதை ஒன்றையும் சொன்னேன். தற்போது அந்தக் கவிதையும் குடையும் ஏதோ உயிரற்றவை போல காட்சி அளித்தன. குடை இன்னும் ஈரப்பதத்துடன் சில்லென்றிருந்தது. பக்கம் வந்த பட்டாம்பூச்சி சற்றும் அமராமல் பறந்து சென்றதால் வாட்டம் கொண்ட மலாின் மனம் கொண்டவனானேன்.

அதுதான் கடைசியாக அவர்களது வசிப்பிடத்திற்கு நான் சென்றது. அதோடு, அனிதாவுடனான கொடுக்கல் வாங்கல் முடிந்தது. காதலும் கூட.

2

ஒரு நாள் ப்ாீத்தா கேட்டாள் எனது பிறந்த தேதி என்னவென்று.

என் பெற்றோர் எனது பிறந்த நாளை தமிழ் நாட்காட்டியின்படி குறித்து வைத்திருந்தார்கள். தமிழ் நாட்காட்டியின் ஒரு தேதிக்கு மேற்கத்திய நாட்காட்டியின் ஒன்றுக்கு மேற்பட்ட தேதிகள் ஒத்துப் போவதால், என்னால் ஒன்றும் சொல்ல இயலவில்லை. ஆனால், பிறந்த நாளைக் கொண்டாடுகிற வழக்கம் எங்கள் வீட்டில் கிடையாது என்பதை சொல்லி வைத்தேன்.

அவள்தான் தேதிகளின் சராசாி கண்டுபிடித்து, எனக்கென்று ஒரு பிறந்த நாளை நிர்ணயித்து, தானே வரைந்த ஒரு மயில் ஓவியத்தை பாிசாக எனக்களித்தாள். எனது பிறந்த நாள் பார்ட்டியாக அவளுக்கு(மட்டுமே) குளிர்பானம்(மட்டுமே) வாங்கித் தந்தேன். அப்பொழுது நாட்காட்டிகளைப் பற்றி நிறைய சொன்னாள்: நாட்காட்டி எப்பொழுது எதற்காக முதலில் தேவைப்பட்டது ? எவ்வாறு நாட்காட்டிகள் வடிவமைக்கப்பட்டன ? உலகத்தில் புழக்கத்திலுள்ள நாட்காட்டிகள் எத்தனை ? இப்படி நிறைய.

அந்த பிறந்த நாளன்று ப்ாீத்தாவைப் பற்றி இரண்டு விசயங்களைத் தொிந்து கொண்டேன். ஒன்று, அவளுக்கு ஓவியம் எழுதத் தொியும். மற்றது, அவளது ஆராயும் அறிவு.

3

அனிதா, நான் மற்றும் ப்ாீத்தா மூவரும் சக ஊழியர்கள்.

சில சமயங்களில் இரண்டு மூன்று நாட்கள் சேர்ந்தாற்போல் அலுவலகத்தில் வேலை ஒன்றும் இல்லாமல் போய்விடும். அத்தகு நாட்களில், ப்ாீத்தாவைக் காண நமக்கே பொறுக்காது. அவளால் சும்மா இருக்கமுடியாது. அனலிடைப் புழு போல, தீமிதி செய்யும் பக்தர் போல(இந்த உவமை அவளுக்குப் பிடிக்காதது) அவளது உணர்ச்சிகள் வெளிப்படும். மூளைக்குத் தீனியில்லையெனில் இப்படித்தான்.

அன்றைக்கு ஒரு நாள், அலுவலகம் செல்லுமுன், காலையில், நாளிதழைப் புரட்டிப் பார்க்க இயலாமல் போய்விட்டது. அத்தகு சமயங்களில் நாளிதழை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வேன். தினசாியை சுருட்டி கையில் எடுத்துப் புறப்பட்டேன். பேருந்தில் வாசிப்பதென்பது எனக்குக் கடினமான காாியம். அலுவல்களுக்கிடையில் சற்று நேரம் வாசித்தால், சற்று மூளை இளைப்பாறும். அதற்கப்புறம் வேலையும் நன்றாய் ஓடும். அன்றைக்கென்று அலுவலகத்தில் மூச்சு திணறும்படியான வேலை. பத்து பதினொரு மணிக்கு முன்பு நானோ ப்ாீத்தாவொ மற்றவரைப் பார்க்கவில்லையெனில், மற்றவாின் மேசைக்குச் சென்று முகமன் கூறி சற்று இளைப்பாறுவது வழக்கம். என்னால் இடத்தை விட்டு நகரமுடியவில்லை. ஆனால், இந்த ப்ாீத்தாவையும் காணோம்.

மாலை வீடு திரும்பிய பின்னர்தான், தினசாியை வாசிக்க நேரம் கிடைத்தது. தினசாியின் அறிவியலுக்கான பக்கத்தில், ப்ாீத்தா எழுதிய மனித செல்களில் நிகழும் உணவு தயாாிக்கும் முறையை, தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஒரு கணிணி தொழில் நுட்பத்துடன் ஒப்பிடும் கட்டுரை*, வந்திருந்தது. அப்புறமாய், அவளை தொலைபேசியில் அழைத்து(அவளை உறக்கத்திலிருந்து எழுப்பும்படியாயிற்று!), ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, அவளுக்குத் தொிந்த அறிவியல் பற்றியும், எனக்குத் தொிந்த அறிவியல் பற்றியும் பேசினோம். ஆனால் தீரவில்லை.

4

அனிதாவுக்குத் திருமணமாகிவிட்டது. ப்ாீத்தாவுக்கும் தான். அதனால் ஒன்றுமில்லை.

ஆனால், ப்ாீத்தா சும்மா இருக்கிறாள்.

—————————————————————–

* – (ஆங்கில கட்டுரையின் சாராம்சம்) Ribosomes inside the cell make the necessary proteins for the cell to live. Before the ribosome can make a protein, it first needs the appropriate DNA instructions. The ribosome sends an enzyme into the nucleus to ‘unzip ‘ the portion of the DNA needed. Then, a nucleic acid called mRNA(messenger RiboNucleic Acid) bonds and copies the unzipped strands of the DNA, and then returns to ribosome. Another type of RNA called transfer RNA or tRNA, collects all the free amino acids and carries them to the ribosome. The amino acids will be used to make proteins according to the mRNA instructions.

It looks more like a client/server distributed computing technology, doesn ‘t it ? Ribosome is the client. DNA is the container of components(also a server) that have instructions. Amino acids are the data. The response for the request made by ribosome is mRNA, an instance of the component. Database requests are satisfied by tRNA.

Series Navigation

இரா. சுந்தரேஸ்வரன்.

இரா. சுந்தரேஸ்வரன்.