பேரா.நா.வா.நினைவு கலைஇலக்கிய முகாம்,கன்னியாகுமரி

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

அழகேந்திரன்


குமரிமாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் குமரி மாவட்டம் 28 ஆவது வருட பேராசிரியர் நா.வானமாலை(நிறுவனர் ஆராய்ச்சி இதழ்) நினைவு கலை இலக்கிய இரண்டு நாள் முகாம் கன்னியாகுமரி அமைதி அறக்கட்டளை கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் வி.சிவராமன் தலைமையில் 20ம் தேதி காலையில் தொடங்கிய இக்கருத்தரங்கிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறிஞர் பெருமக்களும் ஆய்வாளர்களும் வருகை தந்தனர்.

இதழாசிரியர்கள் ஹாமீம் முஸ்தபா(புதிய காற்று),லக்ஷ்மி மணிவண்ணன்(சிலேட்)தமிழறிஞர் முப்பால் மணி,த.க.இ.பெ.மன்ற பொதுச் செயலாளர் கவிஞர் ரவீந்திர பாரதி,மாநில செயலாளர்கள் கவிஞர் இரா.காமராசு,எழுத்தாளர் சி.சொக்கலிங்கம்,டி.எஸ்.நடராஜன், கவிஞர் பெ.அன்பு,மு.சி.ராதாகிருஷ்ணன், மற்றும் கவிஞர் ரசூல்,ஏ.எம்.சத்யன்,தஞ்சை மருத்துவ கல்லூரி தலைமை மருத்துவர் இளங்கோவன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

.

மானுடவியல் ஆய்வுகளை அம்மக்களின் பார்வை சார்ந்தும் ஆய்வாளர்களின் விருப்பு வெறுப்புகளை சாராமலும் பதிவு செய்தலே சரியான அணுகு முறையாகும் எனும் கருத்தை பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியம் முன்வைத்தார்.அவரின் ஆய்வுரைக்கு கருத்துரையை இரா.காமராசு முன்வைத்தார்.முதல் அமர்வுக்கு ஹாமீம் முஸ்தபா நெறியாளராக செயல் பட்டார்.முதல் அமர்வில் இரண்டாவது கட்டுரையை முனைவர் நா.இராமச்சந்திரன் வைக்க அதற்கு ஆர்.பிரேம்குமார் கருத்துரையை வழங்கினார்.இரண்டு கட்டுரைகளுக்குமான விவாதங்களில் பலரும் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து இரண்டாம் அமர்வு நடைப்பெற்றது.அதற்கு நெறியாளராக மு.சி.இராதாகிருஷ்ணன் இருக்க யதார்த்தமும் பின் நவீன யதார்த்தமும் என்ற கட்டுரையை எம்.ஜி.சுரேஷ் முன்வைக்க அந்த கட்டுரைக்கு வி.சிவராமன் கருத்துரையை வழங்கினார்.அதற்கு விவாதம் அதிகம் உருவானது.

இரண்டாம் நாள் நடைபெற்ற மூன்றாவது அமர்வுக்கு ஹெச்.ஜி.ரசூல் நெறியாளராக இருக்க பின் நவீனத்துவம் சிலக் குறிப்புகள் என்ற தத்துவ கட்டுரையை முனைவர் நா.முத்துமோகன் முன்வைக்க அதற்கு பெ.அன்பு கருத்துரை வழங்கினார்.அதனை தொடர்ந்து விவாதம் நடைபெற்றது.அதை தொடர்ந்து முனைவர் ஆர்.முரளி விமர்சனக் கோட்பாடுகளும் மார்க்ஸீயமும் என்ற கட்டுரையை வைக்க அதற்கு முஜீப் ரகுமான் கருத்துரை கூற அதன் பின்னர் விவாதங்கள் எழுந்தன.இலக்கிய கோட்பாடுகள் அடிதள மக்களின் பண்பாடையும் அழகியலையும் படைபாக்கத்துக்கு உதவியது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நான்காம் அமர்வு அதை தொடர்ந்து நடைபெற பெண்ணியமும் மார்க்சியமும் என்ற கட்டுரையை ரேவதி முன்வைக்க அதற்கு நிஷா சத்யன் கருத்துரை வழங்கினார்.பெண் விடுதலை என்பது ஆண்மனம் சார்ந்த அறிவு தளையிலிருந்து விடுபட்டு பெண்களாகவே உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை முன்வைத்து காரசாரமான விவாதங்கள் ஒலித்தன.

நிகழ்ச்சியின் முதல் நாள் நிறைவின் போது தோழியர் மங்கை அவர்களுக்கு எஸ்.கே.கங்கா தலைமையில் நாவலாசிரியர் பொன்னீலன் பாராட்டு தெரிவித்து பொன்னாடை அணிவித்தார்.இரண்டாம் நாளின் துவக்க நிகழ்ச்சியாக மறைந்த எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் திருவுருவ படத்திறப்பு விழா அன்னாரது மகன் முருத்துவர் அறம் முன்னிலையில் நடைபெற்றது. இரண்டு நாள் கருத்தரங்கிற்கு அசன் மைதீன் நன்றி கூற இனிதே நிறைவு பெற்றது.
————————
azhakendrank@gmail.com

Series Navigation

அழகேந்திரன்

அழகேந்திரன்