பெரியார் கொள்கைக்கு கிடைத்த வெற்றிகள்

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

மயிலாடுதுறை சிவா…


கடந்த மூன்று வாரங்களாக காஞ்சி சங்கரின் செய்திகளைப் பற்றி தமிழகத்தில் உள்ள அனைத்துப் பத்திரிக்கைகளும், இணையப் பத்திரிக்கைகளும், வலைப்பூக்களிலும் அனைவரும் அலசிக் கொண்டு வருகிறார்கள். இதனைப் பற்றி நான் எதுவும் எழதப் போவது இல்லை. நாம் எழுதுவதற்கு பதிலாக அமைதியாக, செய்திகளை உற்று நோக்குவது மிகவும் ரசிக்கும் படி உள்ளது.

கடந்த மாதம் வாசிங்டன் நகரில் தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு ஆண்டி கிரியின் தந்தை பேராசிரியர் திரு. ஆண்டி அவர்கள் ‘திராவிட இயக்கத்தின் வளர்ச்சியும், தளர்ச்சியும் ‘ என்றத் தலைப்பில் புத்தகம் கடந்த வருடம் வெளியிட்டு இருந்தார்கள். அந்தப் புத்தகத்தைப் பற்றி ஆய்வுச் செய்து விட்டு அதனை தொடர்ந்து, திரு அரசு செல்லையா, முன்னாள் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர், தலைமையில் ‘திராவிட இயக்கத்தின் கருத்துகள் வளர்ந்துவருகின்றனவா ? தளர்ந்து வருகின்றனவா ? ‘ என்ற தலைப்பில் பட்டிமன்றம் வெகுச் சிறப்பாக நடந்தேறியது. முடிவில் திராவிட இயக்கக் கொள்கைகள் வளர்ந்து வருகின்றன என்ற அணி வெற்றி பெற்றது. ஆனால் அப்படிப் பட்ட பட்டிமன்றம் தற்பொழுது நடைப் பெறவில்லையே ? என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த கட்டுரை.

காஞ்சி சங்கர் கைதின் பொழுது தமிழ் நாட்டில் ஏன் துளி அளவும் அசாம்பாவிதம் நடைப்பெற வில்லை ?

காஞ்சி சங்கரின் கைதிற்கு தமிழ் நாட்டில் வேர்ஊன்ற நினைக்கும் பாசக கட்சிக்கு ஆதரவாக ஏன் யாருமே முன் வரவில்லை ?

காஞ்சி சங்கர் கைதிற்கு ஆர்எஸ்எஸ், விஇப(VHP), அழைப்பு விடுத்த வரலாறுக் காணாத பந்திற்கு ஏன் ஆதரவு இல்லை ?

சுஸ்மா சுவராஜ், ப்ரவீண் தொகடியா, சுப்ரமணிய சுவாமி, இல. கணேசன் இவர்கள் கூக்குரலுக்கு ஏன் தமிழக மக்கள் செவி சாய்க்கவில்லை ?

இவை எல்லாவற்றிக்கும் ஓரேக் காரணம் பகுத்தறிவுத் பகலவன் தந்தைப் பெரியாரின் திராவிட சிந்தனைகள் தமிழ் நாட்டில் ஆழமாக வேறு ஊன்றிவிட்டதே காரணம்.

முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி அவர்கள் காஞ்சி சங்கர் வழக்கு தமிழ்நாட்டில் நடைபெற்றால் நியாயம் கிடைக்காது என்றும், வேறு மாநிலத்திற்க்கு மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தாரே, இது நியாமா ? தன்னுடைய தாய் மண்ணுக்காக அனைத்தையும் இழந்து போராடும் நம் ஈழதமிழர்களுக்காக குரல் கொடுத்த வைகோவை பொடவில் கைது செய்தப் பொழது இந்த அத்வானி எங்கே போனார் ? இதுவரை அதுப் பற்றி ஒரு முறையாவது ஆதரவாக பேசி இருப்பாரா ?

காஞ்சி சங்கரை கைது சம்பவம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி. இதன் மூலம் காஞ்சி சங்கரின் உண்மையான முகம், அத்வானி போல மதவாதிகளின் உண்மையான உருவம் இந்திய மக்களுக்கு தெரிய வருவது மிக மிக நல்லது.

காஞ்சி சங்கர் உண்மையில் தவறுச் செய்து சட்டத்தின் முன் நிற்கிறோ, அல்லது ஜெயலலிதா சொந்த விருப்ப வெறுப்பிற்காக அவரை கைது செயது இருக்கிறாரோ, எது எப்படி இருப்பினும் தமிழகத்தில் உள்ள பெரும் மான்மையான மக்கள் எல்லாவற்றையும் நன்கு கவனித்து வந்துக் கொண்டுதான் உள்ளார்கள். பெருவாரியான மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு காணப்படுவதன் காரணமும், அவர்கள் ஓரளவு பெரியாரின் கருத்துகளோடு ஓத்துப் போகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

காஞ்சி சங்கரின் கைது வரலாற்று சம்பவத்தை பார்க்க தற்பொழுது பெரியார் இல்லையே ? சுயநலமற்ற அவரின், சமுதாயக் கருத்துகள், மேலும் மேலும் வளரும் என்பதில் இதுப் போன்ற சம்பவங்கள் மக்களுக்கு உணர்த்தும்.

நன்றி…

மயிலாடுதுறை சிவா….

திசம்பர் 01. 2004

mpsiva23@yahoo.com

Series Navigation

மயிலாடுதுறை சிவா

மயிலாடுதுறை சிவா