பெண்கள்… 2

This entry is part [part not set] of 11 in the series 20000723_Issue

Y.S. உமா, பிரேமா போஸ்கோ, பிஷாரா, கிரிஜா வேணுகோபால், ஓவியா


கலாச்சாரம் -சில கருத்துக்கள், சில எதிர்வினைகள்

-தொடர்ச்சி..

பிரேமா போஸ்கோ,

M.A.,M.Phil

38, கிரிஸ்டியன்

புருஷன் வீட்ல ஒரு பொண்ணு கஷ்டப்படுத்தப்படறான்னா பெற்றோரே ஏத்துக்க மாட்டேங்கறாங்க. ஆணச் சார்ந்துதான் பெண் வாழணும்ங்கற நிலை. டவுரி system-தை எல்லாம் ஆம்பளைங்க பண்ற விபச்சாரம்னுதான் சொல்லணும். விபச்சாரி எப்படி காசு வாங்கிகிட்டு வாராளோ அது போலத்தான் காசு வாங்கிட்டு வாறாங்க. இந்த நிலையில் பொண்ணுக்கு துணிச்சல் வரணும். கண்டிப்பா ஆம்பளையைச் சார்ந்துதான் இருக்கணும், கல்யாணம்னு ஒண்ணு பண்ணிக்கிட்டுதான் வாழ முடியும்னு இல்லாம தனிச்சு வாழலாம்கற முடிவுக்கு பெண்கள் வரணும், அதுக்கு கலாச்சார மாற்றங்களெல்லாம் வரணும். அப்பத்தான் பெண் இந்த முடிவுக்கு வரமுடியும். தனியா ஒரு பெண் கல்யாணம் பண்ணலைன்னா ஒரு கூட்டத்தில நிக்க முடியல்ல. ஏன் கல்யாணம் பண்ணல ? அந்த பெண்ணுக்கு என்ன குறைன்னு கேப்பாங்க. கலாச்சார மாற்றம் வந்து ஒரு முற்போக்க்கான சமூகமா மாறினாத்தான் இது மாறும்.

இப்ப என்னை எடுத்துக்கிட்டாங்கன்னா- நான் மீட்டிங் போறேன்னா வீட்ல அதுக்கும் permission கேக்கறதில்ல. ஒரு information ஆகத்தான் சொல்லிட்டுப் போறேன். நான் போட்டுமான்னு கேக்கறதில்ல. அவங்களும் அத எதிர்பார்க்கறதில்ல. அப்படி எதிர்பார்த்தாங்கன்னாகூட எனக்கு சரின்னு பட்டுதுன்னா அத துணிந்து செய்வேன்.

பிஷாரா

MSc Mphil.

23, முஸ்லீம்

எங்க வீட்ல எல்லார்த்தையும் படிக்க வச்சிருக்காங்க. அப்பா குடும்பத்தில எல்லாரும் படிச்சவங்க. அம்மா குடும்பத்திலதான் படிக்கல. பொதுவா கேரளான்னு எடுத்துகிட்டா எல்லாரும் படிச்சிருக்காங்க. இங்கயும் அங்கயும் வித்தியாசமிருக்கு. இங்க என்னய கல்யாணமாயிற்றா, எத்தன குழந்தைன்னு கேப்பாங்க. அங்க என்ன படிச்சிருக்க, கிளாஸ் என்னான்னு கேப்பாங்க. இது தமிழ் பண்பாடோ என்னவோ தெரியல. குளச்சல் எல்லாம் பொம்பளைகள வெளியே பார்க்க முடியாது. படிப்பெல்லாம் எட்டு ஒம்பதோட சரி. காலேஜ் போகணும்னா வித்தியாசமா பார்ப்பாங்க. நாங்க எங்களுக்குப் படிக்கிறதுக்கு வேண்டியே குளச்சல் விட்டு இங்க வந்திருக்கோம்.

பெண்கள் படிக்கறதுக்கு எங்க மதம் தடையாகவே இல்லை. சமுதாயம் வந்து தப்பா புரிஞ்சிருக்கு. எங்க மதத்தில நபி மொழின்னு சொல்வாங்க. அதுல என்ன சொல்லியிருக்குன்னா சீனா வரை சென்றாவது கல்வி தேடவேண்டும். அப்படான்னு சொல்லியிருக்கே தவிர நீங்க படிக்காண்டாம் வீட்லயே இரிங்கோன்னு சொல்லல்லே. படிச்ச பொண்ணும் படிச்ச ஆணும் சமம்னுதான் சொல்லியிருக்கு.

கிரிஜா வேணுகோபால்,

MA (Psycology) Counsellor(FPAI)

என்னுடைய அபிப்ராயத்தில் women ‘s Development என்பது ஸ்திரீகளுக்கு சமூகத்தில், பொருளாதார ரீதியில் ஸ்தானம் கிடைக்கும்படியான ஏதொரு method-ம், women ‘s liberation-ன்னு வரும்போது மேலை நாடுகள்ல ஒரு extreme நிலை இருக்கு. ஒரு high level நமக்கு அந்த அளவுக்கு சமூக மாற்றம் ஏற்படல. இங்கும் feminist கள் உண்டு. கேரளத்தை எடுத்துக்கிட்டா, சுகதகுமாரி மாதவிக்குட்டி ரோஸிதாமஸ் எல்லாம் இவங்களுக்கு feminism குறிச்சுள்ள ideas உண்டு.

சமூகத்தில் ஸ்திரீகளுக்கு எதிராயிட்டுள்ள பல பிரச்னைகளை எதிர்ப்பது, டவுரி system-த்தை எதிர்ப்பது. புருஷ மேலாதிக்கத்தை எதிர்ப்பது .இப்படி, நிறைய values எல்லாம் பழைய இதிகாசத்தில் உள்ளது. ஒரு ஸ்திரி நிறைய கொடுமைகளுக்கு உள்ளான பிறகும் விதின்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறது. அவங்களுக்கு எல்லாம் அறிவு தேவையாயிருக்கு. நம்முடைய அவகாசத்தை நாம ஸ்தாபிச்சு எடுக்கணும். நமக்கு அவங்களைப்போல உரிமைகள் எல்லாம் இருக்குங்கறதைப் படிப்பிக்கணும்.

இப்ப முன்ன மாதிரியில்லாம வித்தியாசம் இருக்கு. Employment opportunity எல்லாம் வந்ததுக்குப் பிறகு மாற்றங்களும் இருக்கு. கேரளத்தில் நிறைய மாற்றங்கள் வந்திருக்கு. இரண்டு பேரும் வேலைக்கு போக ஆரம்பிச்ச பிறகுரெண்டும் சமம்தான்னு உள்ள நிலை ஏற்பட்டிருக்கு. வீடு ஜோலி வரைக்கும் share பண்ணிருக்கற நிலை வந்திருக்கு. education அதுக்கு முக்கியமான விஷயம். ஆனா இந்த adjustment மட்டும் போதுமானதில்லை, அவருடைய individuality, rights பற்றிய விஷயங்களும் புருஷனோட மனசில் இருக்கணும். பொதுவாகவே மனைவிதான் adjust பண்ணிப்போகணும்னு இருக்கு. ரெண்டுபேரும் adjust செய்து போணும், ரெண்டு பேரோட அபிப்ராயமும் அங்கீகரிக்கப்படணும்.

self dependent-ஆக ஸ்திரீ இருக்கணும். educated-ஆகி employed-ஆகி economically முழுமையடையும்போது ஒரு ஸ்திரீக்கு individuality-ஐ கண்டறிய முடியும் அப்போ புருஷனோட சார்பா இல்ல ஸ்திரீ வாழறதுன்ற நிலை வரும். இந்த நிலையில் ரெண்டு பக்கமும் adjust செய்து கொள்ள முடியும்.

கேரளாவை எடுத்துகிட்டா, கல்வி, பொருளாதார ரீதியில் பெண்கள் சமநிலை அடைந்திருந்தாலும்கூட problems உண்டு. தாராளமா problems உண்டு. ஒரு சமூக மாற்றம் வரணும்னா, நிறைய கால அவகாசம் தேவைப்படலாம். ஒரு liberation-னுக்கு எத்தனையோ ஆயிரம் வருஷமா அடிமைப்பட்டு ஜீவிச்ச சமூகம் வரணும்ன்னா basically changes வரணும். அதுக்கு கல்வி பொருளாதாரம் எல்லாம் உதவும்.

ஒண்ணு ரெண்டு ஸ்திரீகள் தனியா வாழ முயற்சித்தால் மட்டும்தான் problem நிறைய பேர் ஒரு பாடு பேர் அப்படி முன்வந்தா சமூகம் சப்தம் செய்யாது. அப்படி ஒரு பாடு பேர் பொங்கி வரணும். அப்படி ஒரு நிலையை நாம் எட்டணும். மேலை நாடுகளில் அப்படிப்பட்ட நிலை வந்திருக்கு. இந்த acceptance அங்க உருவாகியிருக்கு. இந்தியாவில அது இல்லை. ஒரு ஸ்திரீக்கு ஒரு கணவன்னு நிலை. ஒரு கணவனுக்கு ஒரு ஸ்திரீங்கறது இல்லை. ஸ்திரீக்கு மட்டும்தான். ஆனாலும் family relationships இங்க இருக்கு. அங்கு family relationships சிதைஞ்சு போச்சு.

society-ல பல மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. நூறு வருஷத்துக்கு முன்பு இருந்தது போல இல்ல. இப்ப inter religion, intercaste marriages எல்லாம் இருக்கு. இப்ப இதெல்லாம் anti-social ஆக ஆகறதில்லை. பண்டு கூட்டுக்குடும்பம் இப்ப தனிக்குடும்பமாக மாறி இருக்கு. ஒரு மாற்றம் நிகழும்போது அதையெல்லாம் anti-social அப்படின்னு நிறுத்தி வைக்க முடியாது.

பொதுவா மதங்களுடைய rules பெண்களுக்கு எதிராகவே இருக்கு. அந்த rules எல்லாம் ஆண்களுக்கே அதிகம் support ஆக இருக்கு. மதம் சம்பந்தப்பட்ட சட்டங்களால் ஸ்திரீகள் ஒதுக்கப்படுகிறார்கள். முஸ்லீம்ல இது இருக்கு. actually இது குரான்ல இல்லைணாக்கும் தெரியுது. நபிகளே விதவை மறுமணத்துக்கான example ஆக இருந்திருக்காரு. ஆனாலும் ஸ்திரீகளுக்கு எதிரா இருக்கு. hindu மதத்திலயும் ஸ்திரீகளுக்கு எதிரான நிலை இருக்கு.

***

ஓவியாவின்பேட்டி அடுத்த வாரம்

Series Navigation

Y.S.உமா, பிரேமா பாஸ்கோ,பிஷாரா, கிரிஜா வேணுகோபால், ஓவியா

Y.S.உமா, பிரேமா பாஸ்கோ,பிஷாரா, கிரிஜா வேணுகோபால், ஓவியா