பூ ை ன சொன்ன க ை த

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


—-

பூனைகள் மழைத் தாவரங்கள் போல திடாரென முளைத்து விடுகின்றன. இந்தப் பூனை நாய் பன்றி ஜென்மங்களுக்கு விவஸ்தையே கிடையாது. குட்டிபோட்ட ஜோரில் அந்தக் குட்டிகளை அவை சீராட்டும் பவிஷு – அந்தப் பக்கம் போகிற வருகிற நபர் யாரையும் கிட்ட நெருங்க விடுகிறதில்லை. பால்குடிப் பருவ பாச ஆவேசப் பாசாங்கு. சற்று வளர்ந்தவுடன் அதே குட்டிகளை சோற்று எதிரிகளாக அவை துவேஷங் கொண்டாடுகின்றன.

குட்டிகள் பால்குடிக்கிற சொகுசில் அது கண்சொருகிக் கிடக்கும்ி. தாண்டிப் போலாம்னா, உர்ர்… உருமலா துாக்கக் குறட்டையா ?… எங்க தெரு மிருக வைத்தியர் ருக்மாங்கதன். அவரை நான் மிருக்மாங்கதன் என்பேன்… பார்வை சற்று மங்கல். மங்கல வேளையில் மங்கல் பார்வையுடன் வாக்கிங் போய், கடி வாங்கி, மிருக வைத்தியரான அவரே ஊசிகள் போட்டுக் கிட்டார்.

‘ ‘எதுக்கு ‘வயித்தைச் சுத்தி ‘ ? ‘ ‘ என்று அவரிடம் கேட்டேன். முறைத்தார். பதில் அவருக்கே தெரியாதோ என்னமோ. ஆத்திரத்தில் என்னையே கடிச்சிருவாரோ என பயமாய் இருந்தது.

பக்கத்து வீட்டில் வயசாளி தம்பதிகள். இரா பூராவும் அந்த மாமி இருமும்… குழந்தைகளின் கார் விளையாட்டு போல. ராக ஆலாபனை போல இது ஷய-ரோக ஆலாபனை.

மாமா குறட்டை நிபுணர்ி. புல்லாங்குழல் உட்பட பல்வேறு வாத்தியங்களை குறட்டையிலேயே முயற்சிப்பார். இருமலும் குறட்டையுமாய் அர்த்தராத்திரி அபஸ்வரக் கச்சேரி. என்ன, திருட்டு பயம் இல்லாமல் இருந்தது. திடாரென இருமல் உருமாறி ஒருமாறி விக்கல் வந்து மாமி கிளம்பினாள் பரலோக யாத்திரை…. காரின் வானப்புறப்பாடு.

ராத்திரி. நான் ஜன்னல் வழியே பார்த்தேன். ‘ ‘துாங்க முடியல்ல… ‘ ‘ என்றார் மாமா. மாமியின் பேச்சைவிட இருமல் அவரது உற்ற துணையாய்ப் பழகியிருந்தது.

மாமா வீட்டைக் காலி செய்து போனார். ‘ ‘யாராவது நல்ல பார்ட்டி வந்தா வீட்டைக் காட்டுங்க ‘ ‘ என்று சாவியைத் தந்தார் வீட்டுக்காரர்ி. ‘ ‘அவசியம்… ‘ ‘ என வாங்கிக் கொண்டேன். வாடகைதாரரை நான் தேர்வு செய்யும் உரிமை! நல்ல விஷயமாச்சே.

விஷ்ணுசக்கரமாக சாவியைக் கையில் சுழற்றிக் கொண்டே அலைந்தேன். நண்பர்களிடமெல்லாம் என் அந்தஸ்து கூடியிருந்தது. ‘ ‘யாராவது வந்தா சொல்லட்டுமா ? ‘ ‘ – ‘ ‘வேணா நானே பாத்துக்கறேன்… ‘ ‘

‘ ‘நீங்க மொத்தம் எத்தனை பேர் ? ‘ ‘

‘ ‘இப்ப சத்திக்கி நானும் இவளும்தான்… ‘ ‘ என்றார் அவர்.

‘ ‘மாமி இருமுவாளா ? ‘ ‘

‘ ‘என்னது ? ‘ ‘

‘ ‘ஒண்ணில்ல..ி. இப்ப சத்திக்கி…ன்னா ? ‘ ‘

‘ ‘பெண்ணு வரா ஊர்லேர்ந்து… ‘ ‘

‘ ‘பொண்ணும் மாப்ளையுமாக்கும்… ‘ ‘

‘ ‘அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகல்ல… ‘ ‘

அப்போதே அவர் கையில் சாவியைக் கொடுக்க கிறுகிறுப்பு. மரத்தடி ஜோசியன் கதை போல…

மரத்தடி ஜோசியன் அந்தப் பையனின் கையைப் பார்த்தான். ‘ ‘ஜாதகப்படி உன் கல்யாணத்துக்குப் பெண்ணோட அப்பாமூலம் தடை வரும். ‘ ‘ – ‘ ‘அப்டிச் சொல்லாதீங்க மாமா ‘ ‘ என்றான் பையன்.

மாமியை வைத்து பெண்ணின் லட்சணங்களை மனம் கணக்கு போட முயன்றது. மாமி சேப்புதான். தோல் சுருங்கி வேர் இறக்கி ஒரு மாதிரி சாணாச்சுருணைத் துணி போலிருந்தது. பழம் பட்டுப் புடவை உடுத்தி காய்ஞ்ச பூ சொருகி இப்படி அம்மணிகள் நவராத்திரிகளில் கோவில் வளாகங்களில் பொறுமையாய் சுண்டலுக்குக் காத்திருப்பார்கள். நாங்களும் காத்திருப்போம் – கன்யாஸ்தீரிகள் சுண்டல் சமயத்துக்கு பளீரென்ற பட்டுப்பாவாடைகளுடன் பிரசன்னமாவார்கள். தீபாராதனைக்கு அந்தப் பாவாடைப் பளபளப்பு கூடிப் போகும். எங்களைப் பார்க்கையில் கழுத்து சுளுக்கும் அளவில் ஒரு நொடிப்பு. எங்களில் யாருக்காவது வேலை கிடைச்சிட்டா அந்த நொடிப்பு நாணமாய் வளையும். அப்போ ‘நம்ம பார்ட்டி ‘ சித்த அல்ட்டிக்கும். வாழ்வுதான்!

‘ ‘வீட்டைப் பாக்கலாமா ? ‘ ‘

கதவைத் திறந்து உள் நுழைகிறேன். உர்ர்… பூனை. வெளிர் இருள். அந்தச் சிவ சிவ கண்கள். சட்டென்று பின் வாங்கினேன். காலி வீட்டில் செளஜன்மாய்ப் பிரசவம் பண்ணியிருக்கிறது. எத்தனை குட்டிகள், எப்போது போட்டது ? அத்தனைக்கு சப்தத் தொந்தரவும் இதுவரை காணாதிருந்தது. ஒருவேளை குட்டிகளுடன் வந்து இங்கே அடைய நினைத்திருக்கலாம்…

வாயில் குட்டியொன்றைக் கவ்வியிருந்தது. வெளியே எடுத்துப் போகிறதா, உள்ளே வருகிறதா ? அருவருப்பாய் பயமாய் இருந்தது. ‘ ‘தாயும் குட்டியுமா… நல்ல சகுனம்! ‘ ‘ என்றாள் மாமி. விசுக்னு புடுங்கியிருந்தால் இப்டிச் சொல்வேளா மாமி.

விட்டா இவளே பிரசவம் பாத்திருப்பா போலிருக்கு.

சுமாரான வீடுதான். சுவர் ஈரம். பார்க்க மூத்திரச் சந்தாட்டம். பின்கதவு குடிகார மோஸ்தரில் லேசா தள்ளாடி நின்றிருந்தது. குளியறைக் கதவு சாத்திக் கொள்ளுமா ? மாமா சற்று அசிரத்தையாகத்தான் வீட்டைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். வாடகை கட்டிவருமா என அவர் எல்லைகள் வேறு… அவசரமாய் ‘ ‘நல்ல சகுனம்! எங்க அம்மாகூடச் சொல்லுவா… ‘ ‘ என மாமியை ஊக்குவித்தேன். மாமியிடம் ஒரு தீய்ந்த தோசை, சீயக்காய், அழுக்கு என கலவையாய் ஒரு வ்வே…

ஜன்னல் வழியே தாத்தாவிடம் பேசியிருக்கிறேன். ஹா, இனி ?!… பெண்ணே நீ முதலில் பேரம் பேச வந்திருக்கப்டாதா.

‘ ‘வாடகை சித்த அதிகம்தான்… ‘ ‘ என்றார் மாமா.

‘ ‘நல்ல ஏரியா. அக்கம் பக்கத்துல மனுஷா நல்லவாளா அமைஞ்சிருக்கே… ‘ ‘ என்றேன்.

‘ ‘யாரு ? ‘ ‘

‘ ‘நான்தான் ‘ ‘ என்றேன் அடக்கத்துடன்.

எனக்குப் பூனைகளைப் பிடிக்காது. புரண்டு படுத்தால் அலறி எழுந்தோடிப் பதற அடிக்கிறது. எலியை விட்டுவிட்டு பாலை கபளீகரம் செய்கிறதும் உண்டு. பக்கத்து வீட்டில் கடித்த எலியை இங்கே கவ்விக் கொண்டுவந்து போடுகிறது. சத்தம் இல்லாமல் காத்திருந்தால் எலிகள் அகப்படக் கூடும். வீட்டுக்குள் வந்து ஓயாத இரைச்சலாய் அவை சத்தம் போட்டால் எலிகள் உஷாராகி … நம்ம துாக்கம் ஸ்வாகா…

இருமல் தொல்லையே தேவலை என்றாகி விட்டாலும் நான் பூனையைப் பொறுத்துக் கொண்டேன். காரணம், ஆ – செளம்யாவுக்கு அந்தப் பூனை பிடித்து விட்டது. வேற்றுாரில் இருந்து அவள் மாற்றலாகி வர அவர்கள் பெரிய வீடு பார்த்திருக்கிறார்கள். இவள் அம்மாவைவிட தோல்சுருக்கம் நிறைந்த பாட்டி வீட்டில் படித்துவிட்டு வருகிறாளா ?…

அவள் வந்து சேர்ந்த விவரம் எனக்குமுன் சகாக்கள் மத்தியில் எப்படியோ பிரபலமாகி யிருந்தது. என்னை – நான் இல்லாத சமயம் தேடி வந்தார்கள் அவர்கள். நான் இருந்தாலும் அடுத்த வீட்டைப் பார்த்தபடி பேசினார்கள்.

‘ ‘நானே நல்ல பார்ட்டியாக் கொண்டு விட்ருப்பேனேடா ‘ ‘ என்றபடி மணி எழுந்து போய்விட்டான்.

சற்று கருப்புதான். மேலுதட்டில் சற்று பூனைமயிர். வண்டல் நதிக்கரை அநாகரிகம் – மேகநடமாட்டமான வானம். பேர் செளம்யா. முதலில் பார்த்தபோது அவள் மடியில் அந்தப் பூனைக்குட்டி. அதன்பேர் என்ன ? (செளம்மியாவ்). அடி ஜுஜ்ஜு, அடி ஜொள்ளு… என என்னவோ உளறியபடி அதைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். பூனையிடம் அத்தனை உற்சாகங் கொள்ள என்ன இருக்கிறது ? அத்தனை பெரிய பெண். வேலைக்கு எங்கோ போகிறாள்… /இப்பவெல்லாம் பெண்களுக்கு சுலபமாக வேலை கிடைத்து விடுகிறது. அவர்கள் சற்று காபிவண்டலாக இருந்தாலும் கூட/… ஆனாலும் வீட்டுக்குள் தாவணியில் வளைய வந்தாள். பார்க்க விநோதமாய் இருந்தது. சற்று பெரிய சைஸ் கன்றுக்குட்டி. கண்ணுக்கு என்னத்துக்கு இத்தனை மை… அப்படியும் பூனைக்கு பயமேயில்லை அவளைப் பார்க்க. கிளியந்தட்டு விளையாட்டைப் போல அவள் ஓட ஓட வாலைத் துாக்கியபடி அது துரத்திப் பின்தொடர்ந்தது. கொஞ்சம் விளையாட்டு அலுத்தபோது அவள் சட்டென அதைத் துாக்கிக்கொண்டு – அடி ஜுஜ்ஜு… என கன்னத்தோடு கன்னம் இழைந்தாள்.

சங்கடம் என்னவென்றால் அந்தப் பூனை அங்கே தங்கிக் கொண்டு தவறாமல் சாப்பாடு என இங்கே தஞ்சம் காண முயன்றது. இரண்டு வீட்டுக்கும் நடுவே ஜன்னல் அதற்கு செளகர்யமாகி விட்டது.

இரவில் திரும்ப குறட்டை சப்தம். பாவம் மாமி என நினைத்து அப்புறம்தான் கண்டுபிடித்தேன். குறட்டை விடுகிறவள் செளம்யா. முன்பற்கள் சற்று விகார எடுப்பு காட்டுகிறபோதே அவளது விரல்சப்பிய குழந்தைப் பருவத்தையும் தற்போதைய குறட்டையையும் நான் எதிர்பார்த்திருக்க வேண்டும். எருமைகள் கழுநீர்த் தண்ணியை இப்படித்தான் உறிஞ்சும்.

குபீரென என்னைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தது பூனை. அதன் வீட்டில் அதை நான் வழிமறிக்கிறதாக அதற்கு எண்ணம். இடம் நிலைப்படுகிற வரை காலுரசி கருணைவேண்டும் பிராணிகள் நிலைப்பட்டு விட்டால் பிராண்டத் தயாராகி விடுகின்றன. நான் அத்தனை தைரியசாலி அல்லதான். தெருக் குருடன் போல நான் அதன்முன் ஒரு குச்சியால் தட்டினேன். (சூ சூ அல்ல. நான் ஜுஜ்ஜு) – ரங்கா ரங்கா. கரணம் போடு… குரங்காட்டி வசனம் மனசில் வந்தது. அது சட்டை செய்யவில்லை. சாப்ட என்ன வெச்சிருக்கே ?… என்கிற தினுசில் என்னைப் பார்த்தது.

செளம்யா பார்க்க ஓரிரு முறை அதற்கு நான் பிஸ்கெட் வீசியிருக்கிறேன். கெட்டுப்போன பழம். நமுத்துப்போன ரொட்டி. அவள் பார்க்க நான் பூனையிடம் நேசம் காட்டுவதை கவனித்து அவள் பூனையை ஜன்னல்பக்கம் அனுப்பினாள். பூனைவிடு காதல், என எனக்குள் கிறுகிறுப்பு. டெளரி எத்தனை தருவார்களோ தெரியாது. கல்யாணத்திலும் கூரைப்புடவையோ தாவணியோ.

இரவில் துாக்கம் முழித்தது எனக்கே பசியாய் இருந்தது. இதற்கு நான் என்ன தருவது. அவள் குறட்டைக்கு பயந்து பூனை இங்கே வந்து என் பிராணனை வாங்குகிறது. பூனை மட்டுமல்ல, அவள் குறட்டை ஒலியில் நிம்மதியிழந்து எலிகளே இங்கே தஞ்சமடைகின்றன. இதையெல்லாம் சகித்துக் கொள்ள என்னிடம் நியாயமான காரணம் இன்னும் இல்லை. எதிர்பாராத ஒரு அசிரத்தைவேளையில் அவள் ஜன்னலை மூட மறந்து தாவணி மாற்றலாம். துணி காயப்போடுகையில் ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி ‘ என தன் சோழிப்பல் திறந்து பாட, கணங்கள் குபீரென கொந்தளிக்கலாம், என நவராத்திரி சுண்டலுக்குப் போல நான் காத்திருந்தேன்.

அவளோ சோகப் பாடல்களின் பிரியையாக இருந்தாள். பாட்டும் அத்தனை சுபிட்சமாக இல்லை. சப்த ஸ்வரமும் அவளுக்கு வரவில்லை. சுருதி நிற்கவேயில்லை. இந்நிலையில் அவள் டூயட் பாடினாலுங்கூட சோக எடுப்புதான் காணும். சாதாரண மனநிலையிலேயே சோகப் பாட்டு பாடுகிறவள் சோகம் தாளாதபட்சம் என்ன பாட்டு பாடுவாளோ ?

ஜுஜ்ஜு… என்ன பேரடா இது ? மனுஷாளுக்கு உளர எத்தனை ஆசையாய் இருக்கிறது. ரொம்ப சாதுப்பூனையாட்டம்தான் இருந்தது. உட்கார்ந்து நம்மை, தலையை மேலுங்கீழும் ஆட்டி பார்வையால் மேயும். எப்போதும் அதன் கண்ணில் ஒரு செல்லச் சோம்பல் இருந்தது. வலது முன்காலைத் துாக்கி மூக்கிலும் கன்னத்திலும் உரசி சூடேற்றிக் கொண்டது. பவ்யம். பணிவு. மிடில்கிளாஸ் சூழ்நிலையில் வளர்ந்த மிடில்கிளாஸ் பூனை. எதிர்ப்புசக்தி கிடையாது. ரத்தசோகை ஜென்மங்கள்.

அட கேடுகெட்டவனே அந்தப் பூனையே உனக்கு பயமாயும் அருவருப்பாகவும் இருக்கிறது, என்றது மனசு.

என் எதிர்காலத் திட்டங்களை அனுசரித்து நான் அதனோடு அனுசரித்துப் போகவேண்டியிருந்தது. அது எப்படியோ அதைப் புரிந்து கொண்டது. வாழ்வில் வெற்றிபெற அல்ல, தோல்விபயத்திலேயே சில விஷயங்கள் நமக்குப் பிடிபட்டு விடுகின்றன. நான் பிஸ்கெட் என எதையும் தின்று கொண்டிருந்தால் வாசனைதட்டி ஜன்னல் வழியே அந்த தாவணி செளம்யா எட்டிப் பார்த்தாள். நான் சட்டென்று பிஸ்கெட்டை வைத்துவிட்டு சட்டை பட்டனை நிமிண்டியபடி ஒரு அகலப் புன்னகை செய்தேன். செளம்யா ஜன்னல்வழியே ஜுஜ்ஜுவை அனுப்பினாள் உடனே. அதுவும் நான் அசந்தநேரம்… என ரொம்ப உரிமையாய் தரையில் இருந்த பிஸ்கெட்டைச் சாப்பிட ஆரம்பித்தது. அது நஷ்டம் 1. செளம்யாவின் தலை மறைந்து கொண்டது. 2.

பிறகு நான் ஜன்னல் கதவுகளை மூடிக்கொண்டு பால்குடிக்க முடிவு செய்தேன். நிகழ்ச்சிக்குப் பொருத்தமாக செளம்யா ஒரு சோகப்பாடலும் பாடியது கேட்கிறது. சோகப்பாடலுக்கு சுருதி வேண்டியதில்லை.

மொட்டைமாடியில் நான் துணிகாயப் போடுகிறேன். அவள் அப்போதுதான் தலையைக் குனிந்தபடி முகம் மறையத் தொங்கிய கூந்தலை சடார் சடாரென துண்டால் அடித்து உலர்த்திக் கொண்டிருக்கிறாள்… வேப்பிலைப் பேய். அவள் கவனிக்காத செளகரியத்தில் நான் நிதானமாக அவளை ஆராய்ந்தபோது சட்டென பேயின் உக்கிரத்துடன் அவள் நிமிர்ந்தாள். நான் அகன்ற புன்னகை ஒன்றை துாண்டிலாக வீசினேன்.

‘ ‘நான் சீனிவாசன்… ‘ ‘

‘ ‘ம் ‘ ‘ என்றாள் பெரும்பற்களை விரியத் திறந்து. அவளிடம் சின்னதாய் இருக்க வேண்டிய ஐட்டங்கள் பெரிதாயும், பெரிதாய் இருக்க வேண்டிய சமாச்சாரங்கள் சின்னதாயும் இருந்தாப் போலிருக்கிறது.

‘ ‘உங்க பேர் தெரியும் ‘ ‘ என்றேன் என் ஆராய்ச்சி நிபுணத்துவத்துடன்.

அவள் முகம்மாறி ‘ ‘உங்க வீட்டுப் பூனையால இங்க ஒரே தொந்தரவு ‘ ‘ என்றாள்.

அட அவள்வீட்டுப் பூனை என நான் நினைக்கிறேன். அவள் என்வீட்டுப் பூனை என நினைத்திருக்கிறாள். அப்படியானால் அவள் அந்தப் பூனையைக் கொஞ்சுவது, என்னையே அவள,ி அட ஜுஜ்ஜு, அட ஜொள்ளு… எனக் கொஞ்சுவதாக ஒரு மயக்கம்.

உற்சாகமாய் ஒரு சோகப்பாடலை மனம் பாடியது. பாரதிராஜா பாணியில் கனவில் தாவணிகள் பறந்தன. அடுத்த நாள் அவள் அலுவலகம் போயிருந்த வேளையில் அந்த ஜுஜ்ஜு என் வீட்டுப் பக்கம் குதித்…

விட்டேன் ஒரு உதை. எனக்குக் கொஞ்சம் ஃபுட்பால் விளையாட வரும்.

—-

storysankar@rediffmail.com

s shankaranarayanan 2/82 second block mugappair west chennai 600 037 ph/res 044.26258289 044.2652194

Series Navigation