பூமியின் இரண்டாவது சந்திரன் – க்ருய்த்னே(Cruithne)

This entry is part [part not set] of 28 in the series 20020924_Issue


பூமிக்கு ஒரு இயற்கையான சந்திரன் தான் இருக்கிறது என நம் பாடப்புத்தகங்கள் சொல்கின்றன. உண்மையில் பூமிக்கு இரண்டு சந்திரன்கள் உண்டு.

இரண்டாவது சந்திரன் சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு க்ருய்த்னே என பெயரிட்டிருக்கிறார்கள்.

இது சந்திரன் போல பெரிய கோளம் அல்ல. அதனாலேயே இது கண்டறியப்படாமல் இருந்தது. இது அஸ்ட்ராய்ட் எனச் சொல்லப்படும் விண்பாறை.

இது க்ருய்த்னே பூமியுடன் 1:1 இணைப்பில் பூட்டப்பட்டிருக்கிறது. (உதாரணமாக, நெப்டியூனும் புளூட்டோவும் 3:2 இணைப்பில் இருக்கின்றன. அதாவது நெப்டியூன் சூரியனை 3 தடவை சுற்றி வரும் அளவு காலத்தில் புளூட்டோ மிகச்சரியாக 2 முறை சுற்றி வருகிறது. க்ருய்த்னே சூரியனை ஒரு முறை சுற்றி வரும் காலகட்டத்தில் பூமியும் சூரியனை ஒரு முறை சுற்றி வருகிறது. சந்திரனும் பூமியும் மிக அருகில் இருப்பதால், பூமி சூரியனைச் சுற்றி வரும் கால அளவும், சந்திரன் சூரியனைச் சுற்றிவரும் கால அளவும் ஒன்று. ஆகையாலேயே க்ருய்த்னே பூமியின் இரண்டாவது சந்திரன் என அழைக்கப்படுகிறது.

இவ்வாறு க்ருய்த்னே பூமியின் அதே கால அளவில் சூரியனைச் சுற்றிவருவது இன்னும் 5000 வருடங்களுக்குத் தொடரும். அதன் பின்னால், அது இந்த பாதையிலிருந்து விடுபட்டு வெளியே ஓடும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.

இது பூமிக்கு மிக அருகாமையில் சந்திரனை விட்டு சற்றுத் தள்ளி இருக்கும் கிரகம் அல்ல. இது ஒரு அஸ்ட்ராய்டைப் போல, அல்லது ஒரு விண்மீன் போல பயணிக்கிறது. இதன் பாதை புளூட்டோவிலிருந்து பூமி வரை இருக்கிறது.

கீழ்க்கண்ட முகவரியில் ஆங்கிலத்தில் இதன் பாதை வரை படம் காணலாம்.

http://burtleburtle.net/bob/physics/cruithne.html

http://www.astro.queensu.ca/~wiegert/3753/3753.html

Series Navigation

செய்தி

செய்தி