புல்லில் உறங்குதடி சிறு வெண்மணிபோல் பனித்துளியே!
கரு.திருவரசு

எடுப்பு
புல்லில் உறங்குதடி – சிறு
வெண்மணிபோல் பனித்துளியே
உள்ளம் தெளியுதடி – அந்த
ஒரு துளியின் தூய்மையிலே
கண்ணிகள்
வானத் திறங்கி வந்த – அந்த
வண்ணத் துளி போலிருந்தேன்
ஞாலப்பெரு வெளியில் – வந்து
விழுந்து எனை நானிழந்தேன்
முத்துப் பனித்துளியோ – சுடர்
மூலத்திலே சேர்ந்துவிடும்
பித்துப் பிறவி இது – இங்கு
பேதம் வளர்க்குதடி
சொட்டும் மணி வைரம் – வாழும்
சின்னஞ்சிறு வாழ்வினிலே
முற்றும் உயர்ந்ததடி – அம்மம்மா
மோனத்திலே மின்னுதடி
thiru36@streamyx.com