புரண்டு படுத்த அன்னை

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

சித்ரா சிவகுமார்


செய்வதைச் செய்யட்டும் அமைதி காப்போம்
எத்தனை தூரம் போக முடியும்
என்றே இருந்த இயற்கை அன்னை
சற்றே புரண்டு படுத்தது தெரியும் – அதனால்
சென்றன பல உயிர்கள் மண்ணுக்குள்.

தந்தையைத் தேடி ஒரு குரல்
தாயைத் தேடி ஒரு குரல்
மகனைத் தேடி ஒரு குரல்
மகளைத் தேடி ஒரு குரல் – இதுவே
இயற்கை தந்த கடும் தண்டனை.

புயலால் ஒரு புறம் உயிர்பலி
நடுக்கத்தால் ஒரு புறம் உயிர்பலி
இயற்கையை வெல்ல யாரால் முடியும்
இறப்பை வெல்ல யாரால் முடியும் – இதுவே
மனிதன் பெற வேண்டிய போதனை.


chitra@netvigator.com

Series Navigation

சித்ரா சிவகுமார்

சித்ரா சிவகுமார்